Claim: ஒடிசா பாலாசோர் ரயில் விபத்து களத்தில் RSS ஸ்வயம்சேவகர்கள்.
Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
ஒடிசா ரயில் விபத்து களத்தில் உதவும் RSS தன்னார்வலர்கள் என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
” ஒடிசா பாலாசோர் ரயில் விபத்து களத்தில் RSS ஸ்வயம்சேவகர்கள். அப்பகுதி RSS மாவட்ட இணை அமைப்பாளர் திரு.விஷ்ணு தலைமையில் 25 ஸ்வயம்சேவகர்கள் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ” என்கிற செய்தியுடன் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதனைப் பலரும் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு கிண்டலாக பதிலளித்தாரா ரவீந்திர ஜடேஜா?
Fact Check/Verification
ஒடிசா ரயில் விபத்து களத்தில் உதவும் RSS தன்னார்வலர்கள் என்று பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா பகிர்ந்துள்ள புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, Friends of RSS பக்கத்தில் கடந்த பிப்ரவரி 12, 2018 அன்று இப்புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நம்முடைய தேடலில் VSK Bharath என்கிற இணைய ஊடகத்தில் பிப்ரவரி 13, 2015 அன்று “RSS Swayamsevaks rushed for relief activities” என்று Anekal ரயில் விபத்து குறித்த செய்தியுடன் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

RSS.Org பக்கத்திலும் இப்புகைப்படத்துடன் 2015ஆம் ஆண்டு “Bangaluru intercity train mishap : RSS Swayamsevaks active in rescue operations” என்று இப்புகைப்படத்துடன் Anekal ரயில் விபத்து குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

Also Read: ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கப்பட்டதா அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்?
Conclusion
ஒடிசா ரயில் விபத்து களத்தில் உதவும் RSS தன்னார்வலர்கள் என்று பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா பகிர்ந்துள்ள புகைப்படம் 2015ஆம் ஆண்டு Anekal ரயில் விபத்தின்போது எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
News Report From, RSS.Org, Dated February 14, 2015
News Report From, VSKBharat, Dated February 13, 2015
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)