சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Check‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு கிண்டலாக பதிலளித்தாரா ரவீந்திர ஜடேஜா?

‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு கிண்டலாக பதிலளித்தாரா ரவீந்திர ஜடேஜா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு கிண்டலாக பதிலளித்தார் ரவீந்திர ஜடேஜா

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்களை (1 சிக்ஸர், 1 பவுண்டரி) விளாசி இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் ரவீந்திர ஜடேஜா. 

இதனையடுத்து, “கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி.ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்! பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக தமிழக பாஜக தரப்பில் டிவீட் ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த டிவீட்டுக்கு பதிலளிக்கும் வகையில், “நான் பாஜக காரியகர்த்தா என்பது உண்மை. ஆனால் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா” என்று ரவீந்திர ஜடேஜா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா என்று அண்ணாமலைக்கு ரவீந்திர ஜடேஜா கிண்டலாக பதிலளித்தாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/selvan.karuppusamy
நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா என்று அண்ணாமலைக்கு ரவீந்திர ஜடேஜா கிண்டலாக பதிலளித்தாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/karuththu122
நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா என்று அண்ணாமலைக்கு ரவீந்திர ஜடேஜா கிண்டலாக பதிலளித்தாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/prasanna.vengat.71

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: டெல்லியில் கைதான மல்யுத்த வீரர்கள் காவல் வாகனத்தில் சிரித்துக் கொண்டே செல்ஃபி என்று பரவும் AI புகைப்படம்!

Fact Check/Verification

‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு ரவீந்திர ஜடேஜா கிண்டலாக பதிலளித்தாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக ரவீந்திர ஜடேஜா இவ்வாறு பேசியுள்ளாரா என்பதை உறுதி செய்ய அவரது சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் பொது ஊடகத்தில் ஆராய்ந்தோம். அதில் இவ்வாறு ஜடேஜா பேசியதாக எந்த ஒரு பதிவோ அல்லது செய்தியோ நமக்கு கிடைக்கவில்லை.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள மே 30, 2023 அன்று இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை. தொடர்ந்து தேடுகையில், ஐபிஎல் வரலாற்றிலேயே 150 விக்கெட்டுகள் எடுத்த முதல் இடதுகை பந்துவீச்சாளர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜாபெற்றதாக கூறி மே 23, 2023 அன்று இந்நிறுவனம் நியூஸ்கார்ட் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.   

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.

Also Read: புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்றாரா சுகி.சிவம்?

Conclusion

‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு ரவீந்திர ஜடேஜா கிண்டலாக பதிலளித்தாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Facebook Post from News 7 Tamil, Dated May 23, 2023

Phone Conversation with Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil, Dated May 31, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular