Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: குஜராத் ஸ்டேடியத்தை ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலம் காயவைத்த காட்சி
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2020ஆம் ஆண்டு அசாமில் எடுக்கப்பட்டதாகும்.
ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்ற அகமதாபாத் ஸ்டேடியம் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே மழையின் நடுவே நடைபெற்ற இப்போட்டியில் CSK வெற்றி பெற்றது. இந்நிலையில்,“அனைத்து மாநிலங்களுக்கும் குஜராத் முன்மாதிரியாக திகழ்கிறது. ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ். அடேய் அது ஸ்டேடியமா இல்ல கல்யாண பெண்ணா” என்று இந்த வீடியோ வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்ற அகமதாபாத் ஸ்டேடியம் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து கீ-வேர்டுகளுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது யூடியூப் பயனாளர் ஒருவர் வெளியிட்டிருந்த 2020ஆம் ஆண்டு வீடியோ ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், “Guwahati Barsapara Stadium. Using iron, hairdryer, vacuum to dry the piych” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.
அதில், தற்போது குஜராத் மாநிலம், அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று வைரலாகும் வீடியோவில் உள்ள காட்சி இடம்பெற்றிருந்தது.
OutLookindia மற்றும் NDTV வெளியிட்டிருந்த அசாமில் கட்டுரைகளில் மழையால் T20 மேட்ச் தடைபட்ட செய்தியில் ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக பிட்ச்சைக் காயவைக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
அசாம் கவுகாத்தி பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – ஸ்ரீலங்கா இடையிலான முதல் T20 சர்வதேச கிரிக்கெட் போட்டி மழையால் தடையான நிலையில் அந்த ஸ்டேடியத்தை ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கும் காட்சி prag News செய்தியில் இடம்பெற்றுள்ளது.
The Lallantop, NNIS Sport News, India Today உள்ளிடவற்றிலும் தற்போதைய வைரல் காட்சியுடன் அசாம் ஸ்டேடியம் குறித்த செய்தி கடந்த 2020ஆம் ஆண்டே இடம்பெற்றுள்ளது.
எனவே, வைரலாகும் வீடியோவில் உள்ள காட்சி குஜராத் மாநிலம், அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டி காட்சியல்ல இது; கடந்த 2020ஆம் ஆண்டு அசாம் கவுகாத்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற T20 போட்டியின்போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்ற அகமதாபாத் ஸ்டேடியம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
YouTube Video From, India Today, Dated January, 2020
YouTube Video From, Prag News, Dated January, 2020 Report From, Outlookindia, Dated January 06, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
September 20, 2024
Vijayalakshmi Balasubramaniyan
May 22, 2024
Vijayalakshmi Balasubramaniyan
June 2, 2023