Friday, April 4, 2025

Fact Check

Fact Check: உத்திரப்பிரதேசத்தில் காவல் துறையினர் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?

banner_image

Claim: உத்திரப்பிரதேசத்தில் காவல் துறையினர் மீது தாக்குதல்
Fact: வைரலாகும் சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்ததாகும்

“பாஜக ஆளும் உத்திரபிரதேசத்தில் காவல்துறையின் நிலை இதுதான். பாசிஸ்ட்டுகள் ஆட்சியில் நோ்மையான காவல்துறை உயா் அதிகாாிகளின் நிலைமைகளை பற்றி கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உத்திரப்பிரதேசத்தில் காவல் துறையினர்  மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வைரலாகும் நிகழ்வு
Screenshot from Twitter @hyderali857685
உத்திரப்பிரதேசத்தில் காவல் துறையினர்  மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வைரலாகும் நிகழ்வு
Screenshot from Facebook/TowheedOodagathurai
உத்திரப்பிரதேசத்தில் காவல் துறையினர்  மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வைரலாகும் நிகழ்வு
Screenshot from Facebook/vivek.ammu.52

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியை இந்தியில் பேச ஆட்சேபித்தாரா?

Fact Check/Verification

உத்திரப்பிரதேசத்தில் காவல் துறையினர்  மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அதன் பின்னணியில் இருக்கும் உண்மையை அறிய, அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆராய்ந்தோம்.

அதில்Angry over minor girl’s death, mob beats cops inside police station in Bengal’s Kaliaganj | Video’ என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து இந்தியா டுடே செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு உத்திரப் பிரதேசத்தில் நடக்கவில்லை, அது மேற்கு வங்காளத்தில் நடந்ததென அறிய முடிகின்றது.

உத்திரப்பிரதேசத்தில் காவல் துறையினர்  மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வைரலாகும் நிகழ்வு
Screengrab from India Today

சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் காலியாகஞ்ச் பகுதியிலிருக்கு கால்வாய் ஒன்றில் 17 வயது இளம்பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரும் கலவரம் அப்பகுதியில் வெடித்தது.

இக்கலவரத்தில் காலியாகஞ்ச் காவல்நிலையம் எரிக்கப்பட்டு, காவலர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இத்தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே தற்சமயம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்து,  கலவரக்காரர்களின் ரௌடித்தனம் எல்லை மீறிய போதும், காவல்துறையினர் மிகவும் பொறுமையாக இருந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை.  ஆகவே இந்த கலவரக்காரர்கள் மீது மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/KunalGhoshAgain/status/1651108886504697856

இவரைப் போன்று பலரும் வைரலாகும் வீடியோ மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு அவ்வீடியோவை தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

Also Read: கேரள வந்தே பாரத் ரயிலின் ஒழுகிய மேற்கூரை என்று பரவும் தவறான புகைப்படம்!

Conclusion

உத்திரப்பிரதேசத்தில் காவல் துறையினர்  மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வைரலாகும் நிகழ்வு, உண்மையில் மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்வு என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet by Kunal Ghosh, Spokes person, AITMC, on April 26, 2023
News report by India Today on April 26, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,672

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.