Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: தமிழில் பேசு; இந்தியில் பேச வேண்டாம் என்று மனைவியிடம் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்
Fact: வைரலாகும் செய்தி தவறான புரிதலுடன் பரவி வருகிறது. அவர் மனைவியை கேலி செய்யும் வகையில் அதைக்கூறியிருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான், விருது வழங்கும் விழாவில் மனைவியை இந்தியில் பேசவேண்டாம்; தமிழில் பேசுங்கள் என்று கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான், விகடன் விருது விழாவில் மனைவியை ”தமிழில் பேசவும்; இந்தி வேண்டாம்” என்று கூறியதாக செய்தி ஒன்று ANI உள்ளிட்ட முன்னணி ஊடகங்களில் முழுமையற்ற தலைப்புடன் பரவி வருகிறது. தமிழில் பரவிய இச்செய்தியில் சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுமென்றே மனைவியை இந்தியில் பேச வேண்டாம் என்று கூறியது போன்று பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சன்னி லியோனுக்கு கூடிய கூட்டத்தை அண்ணாமலைக்கு கூடியதாக பரப்பும் இணையவாசிகள்!
Fact Check/Verification
ஏ.ஆர்.ரஹ்மான், விருது வழங்கும் விழாவில் மனைவியை இந்தியில் பேச வேண்டாம் என்று கூறியதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
விகடன் செய்தி நிறுவனம், விகடன் சினிமா விருதுகள் விழாவை சமீபத்தில் நடத்தியிருந்தது. அதில் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ஆர் ”மறக்குமா நெஞ்சம்?” பாடலுக்காக பெற்றிருந்தார்.
அவ்விருதை தனது மனைவிக்கு விழா மேடையில் டெடிகேட் செய்த ஏ.ஆ.ரஹ்மான், “வழக்கமாக என்னுடைய பேட்டிகளை எனக்கு பார்க்க பிடிக்காது. ஆனால், என் மனைவி என்னுடைய குரல் நன்றாக இருக்கிறது என்று அதைத் திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருப்பார்” என்று கூறினார். அதற்கு அவரது மனைவி சாய்ரா பானு பதில் கூற முயன்ற பொழுது அவருக்கு தமிழ் சரளமாக பேச வராது என்பதால், “இந்தியில் பேசாதீங்க; தமிழில் பேசுங்க” என்று கிண்டலடிக்கும் வகையில் கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதற்கு அவரது மனைவி, “மை காட்…மன்னிக்கவும். எனக்கு சரளமாக தமிழ் வராது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடைய குரல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய குரலை நான் விரும்புகிறேன்” என்று பேசியிருந்தார்.
மேலும், இதனைத்தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியின் தமிழ் குறித்து, “என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க?” என்று நடிகை கஸ்தூரி பகிர்ந்திருந்த நிலையில், “காதலுக்கு மரியாதை” என்று ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, மனைவியை கேலி செய்யும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதை முழுமையற்ற தலைப்புடன் சில செய்தி நிறுவனங்களும், தவறான புரிதலில் பதிவர்களும் பகிர்ந்து வருகின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி என்று பரவும் போலி பிபிசி கருத்துக்கணிப்பு!
Conclusion
ஏ.ஆர்.ரஹ்மான், விருது வழங்கும் விழாவில் மனைவியை இந்தியில் பேச வேண்டாம் என்று ஆட்சேபித்ததாகப் பரவும் செய்தி தவறான புரிதலில் பரவுகிறது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாகத் தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources YouTube Video From, Cinema Vikatan, Dated April 25, 2023 Twitter Post From, A.R.Rahman, Dated April 27, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.