Saturday, March 15, 2025
தமிழ்

Fact Check

கேரளாவில் 32000 பெண்கள் இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றப்பட்டு ISIS தீவிரவாதிகளால் சீரழிக்கப்பட்டதாக பரவும் வீடியோவின் உண்மை பின்னணி!   

banner_image

கேரளாவில் 32000 பெண்கள் இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றப்பட்டு ISIS தீவிரவாதிகளால் சீரழிக்கப்பட்டுள்ளனர் என்று ஷாலினி உன்னிகிருஷ்ணன் எனும் பெண் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

‘கேரளாவில் மதம் மாறிய ஷாலினி உன்னி கிருஷ்ணன் பகிர்ந்தது! 32000 இளம் பெண்கள் இஸ்லாமுக்கு லவ் ஜிகாத்தால் மதம் மாறி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உடற் பசிக்கு இரையான பரிதாபம்! மறுத்தவர்கள் மண்ணில் புதைக்கப்பட்ட பரிதாபம்’  என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த வீடியோவை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட பலர் பகிர்ந்துள்ளனர்.

கேரளாவில் 32000 பெண்கள் இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றப்பட்டு ISIS தீவரவாதிகளால் சீரழிக்கப்பட்டுள்ளனர் என்று பரவும் வீடியோ
Screenshot from Twitter @imkarjunsampath
கேரளாவில் 32000 பெண்கள் இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றப்பட்டு ISIS தீவரவாதிகளால் சீரழிக்கப்பட்டுள்ளனர் என்று பரவும் வீடியோ - 01
Screenshot from Facebook / barathittamil
கேரளாவில் 32000 பெண்கள் இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றப்பட்டு ISIS தீவரவாதிகளால் சீரழிக்கப்பட்டுள்ளனர் என்று பரவும் வீடியோ - 02
Screenshot from Facebook / kkstamil.kkstamil.1

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஹெல்மெட் அணியாதவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டாரா?

Fact Check/Verification

கேரளாவில் 32000 பெண்கள் இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றப்பட்டு ISIS தீவிரவாதிகளால் சீரழிக்கப்பட்டுள்ளனர் என்று ஷாலினி உன்னிகிருஷ்ணன் எனும் பெண் கூறியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் வீடியோ இந்தியில் இருந்தது. இதற்கான சப்டைட்டில் (மொழிப்பெயர்ப்பு) ஆங்கிலத்தில் இருந்தது. இவ்வீடியோவில் பெண் ஒருவர் புர்கா அணிந்துக்கொண்டு பேசுவதாக இருந்தது. அப்பெண்,

‘எனது பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணன். நான் செவிலியராகி சேவை புரிய நினைத்தேன். ஆனால் நான் இப்போது ஃபாத்திமா பாஹு என்ற பெயருடன் ISIS தீவிரவாதியாக ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ளேன். என்னைப்போல் 32000 பெண்கள் மதம் மாற்றப்பட்டு சிரியா மற்றும் ஏமன் பாலைவனங்களில் புதைக்கப்பட்டுள்ளனர். ஒரு சாதாரண பெண்ணை பயங்கர தீவிரவாதியாக மாற்றும் கொடூர விளையாட்டு கேரளாவில் நடந்து வருகின்றது. அதுவும் வெளிப்படையாக நடந்து வருகின்றது.. இதை யாராவது தடுப்பார்களா? இது என்னுடைய கதை. இது 32000 பெண்களின் கதை.  இது கேரளாவின் கதை’

என்று பேசி இருந்தார்.

வைரலாகும் வீடியோவில் காணப்படும் பெண் பார்ப்பதற்கு நடிகை அடா ஷர்மா போல் இருந்ததால் நமக்கு இவ்வீடியோ குறித்து சந்தேகம் ஏற்பட்டது. ஆகவே ‘கேரளா ஸ்டோரி’ என்ற கீ வேர்டை பயன்படுத்தி இணையத்தில் தேடினோம்.  இதில் வைரலாகும் வீடியோ ‘தி கேரளா ஸ்டோரி’ எனும் திரைப்படத்தின் டீசர் என்பதை அறிய முடிந்தது.

https://www.youtube.com/watch?v=udoCRDjqxv8

இத்திரைப்படத்தை சன்ஷைன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அடா ஷர்மா நாயகியாக நடித்துள்ளார். சன்ஷைன் பிக்சர்ஸும் அடா ஷர்மாவும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டீசரை பகிர்ந்துள்ளனர்.

https://twitter.com/sunshinepicture/status/1588066817159069696

இந்த அலுவலகத்தின் தற்போதைய தோற்றம் வைரலாகும் புகைப்படத்திலிருந்து மாறுபட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக புதிய அலுவலக படத்தையும் வைரலாகும் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

https://twitter.com/adah_sharma/status/1588421889923633152

இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் பெண் கேரளாவை சார்ந்தவர் கிடையாது என்பதும், அவர் பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணனோ கிடையாது என்பதும் தெளிவாகின்றது. அப்பெண் மும்பையை சேர்ந்த நடிகை அடா ஷர்மாவார். அடா ஷர்மா நடிப்பில் வரவிருக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டீசரையே கேரளாவில் மதம் மாறிய ஷாலினி உன்னி கிருஷ்ணன் பகிர்ந்தது என்று தவறாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Also Read: மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தாரா அண்ணாமலை?

Conclusion

கேரளாவில் 32000 பெண்கள் இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றப்பட்டு ISIS தீவிரவாதிகளால் சீரழிக்கப்பட்டுள்ளனர் என்று ஷாலினி உன்னிகிருஷ்ணன் எனும் பெண் கூறியதாக பரவும் வீடியோ ஒரு திரைப்படத்தின் டீசர் வீடியோவாகும். இதை தவறாக விஷமிகள் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

YouTube Video, from Sunshine Pictures, on November 03, 2022
Twitter Post, from Sunshine Pictures on November 03, 2022
Twitter Post, from Adah Sharma on November 04, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.