Claim: ஸ்மிருதி இராணி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் – ஈ.பி.எஸ்
Fact: இத்தகவல் தவறானதாகும். அதிமுக தரப்பு இதை தெளிவு செய்துள்ளது.
நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாஜக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக கடுமையாக பேசினார். மேலும் பெண் எம்பிகளை நோக்கி ராகுல் பறக்கும் முத்தம் தந்ததாகவும் புகார் செய்தார்.
இந்நிலையில்,“நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி ராணி வடிவில் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை கண்டேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை என பரவும் வதந்தி!
Fact Check/Verification
ஸ்மிருதி இராணி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
முன்னதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவே இல்லை” என்று பதிலளித்தார்.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். அதில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
Also Read: இஸ்லாமியர்கள் வாழும் தெருவில் நுழையக்கூடாது என்று விரட்டப்பட்டாரா இந்து ஒருவர்?
Conclusion
ஸ்மிருதி இராணி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone Conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK
Phone Conversation with Vinothkumar, Thanthi TV
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)