Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் இந்துக்கள் நுழைய கூடாது என்று இந்துவை அடித்து விரட்டும் முஸ்லிம்
Fact: வைரலாகும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்றாகும்.
இஸ்லாமியர்கள் வாழும் தெருவிற்குள் நுழையக்கூடாது என்று இந்து ஒருவர் அடித்து விரட்டப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏரியாக்களில் இந்துக்கள் நுழைய கூடாதுனு சொல்லி அந்த அப்பாவி ஹிந்துவை அடித்து விரட்டுகிறான் மதவெறி ஜிஹாதி” என்று இந்த வீடியோ வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று கேள்வி எழுப்பினாரா சீமான்?
இஸ்லாமியர்கள் வாழும் தெருவிற்குள் நுழையக்கூடாது என்று இந்து ஒருவர் அடித்து விரட்டப்பட்டதாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியப்போது அது நம்மை PM 2 Vlogs என்கிற யூடியூப் பக்கத்திற்கு எடுத்துச்சென்றது. அப்பக்கத்தைப் பற்றிய குறிப்பில் “Hello Guys, I help homeless people and also do social expirment. If you like Our content then make sure to hit the like button and subscribe our channel. Thanks for your support” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சேனலில் Social experiment வீடியோக்கள் பலவற்றையும் காண முடிந்தது. அதில், தற்போது வைரலாகும் வீடியோவின் பகுதி ”Social Experiment| Hindu| Muslim” என்கிற தலைப்பில் ஜூலை 26ஆம் தேதியன்று வெளியாகியிருந்த 19 நிமிட முழு வீடியோ ஒன்றில் காணக்கிடைத்தது.
மேலும், வீடியோவின் இறுதியில் கேமராவை அவர்களைச் சுற்றி கூடிய கூட்டத்தினரிடம் காட்டி இவர்கள் இருவரும் இந்து மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையே ஒற்றுமையை அதிகரிக்கும் வகையில் இதை செய்வதாகவும் கூறுகின்றனர்.
இதிலிருந்து, குறிப்பிட்ட வீடியோவில் இருந்தே வைரல் வீடியோ எடிட் செய்யப்பட்டு மதசாயம் பூசப்பட்டு பரப்பப்படுகிறது என்பது உறுதியாகிறது.
Also Read: உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டாரா?
இஸ்லாமியர்கள் வாழும் தெருவிற்குள் நுழையக்கூடாது என்று இந்து ஒருவர் அடித்து விரட்டப்பட்டதாகப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட காட்சி என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Youtube Video from PM 2 Vlog, Dated July 26, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
July 3, 2025
Ramkumar Kaliamurthy
May 13, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 6, 2025