Claim: சவுதி அரேபியாவில் தங்கத்தால் செய்யப்பட்ட மோடி சிலை
Fact: வைரலாகும் சிலை இந்தியாவில் செய்யப்பட்டதாகும்.
சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் செய்யப்பட்ட சிலை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
”பத்தரை மாத்து தங்கம் இந்தியாவின் 140 கோடி மக்களின் இதயதெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உடைய மார்பளவு சிலை பத்தோன்பதரை பவுனில் அதுவும் சவுதி அரேபியாவில் பார்க்கவே பரவசமாக இருக்கிறது அல்லவா” என்று இந்த வீடியோ வைரலாகிறது. பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட பலரும் இதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவின் பொய்யால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
சவுதி அரேபியாவில் தங்கத்தால் செய்யப்பட்ட மோடி சிலை என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேகளாகப் பிரித்து கீ-வேர்டுகளையும் உபயோகித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜனவரி 20ஆம் தேதியன்று ”Surat jewellers carves PM Narendra Modi’s bust in ‘156 gram gold” என்று Indian Express வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது. அதில் வைரலாகும் வீடியோவில் உள்ள அதே சிலை, புகைப்படமாக இடம்பெற்றிருந்தது.அதில், சூரத்தைச் சேர்ந்த Radhika Chaind (Veli beli) என்னும் நகைக்கடை உரிமையாளரான பசந்த் போஹ்ரா என்பவர் பிரதமர் மோடியின் உருவத்தை 156 கிராம் தங்கத்தில் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தேடியபோது, ANI வெளியிட்டிருந்த “Surat jeweller carves 156 gm gold idol of PM Modi to celebrate BJP’s Gujarat win” என்கிற பேட்டி நமக்குக் கிடைத்தது.
அதேபோன்று, Jansatta என்கிற யூடியூப் பக்கத்திலும் பசந்த் போஹ்ரா நேர்காணல் இடம்பெற்றுள்ளது.
BBC News Marathi, News 18 India உள்ளிட்ட ஊடகங்களிலும் இதுபற்றிய செய்தி வீடியோ வெளியாகியுள்ளது.
எனவே, குறிப்பிட்ட பிரதமர் மோடியின் தங்க சிலை உருவம் இந்தியாவின் சூரத்தில் தயாரிக்கப்பட்டது என்பது இதன்மூலமாக தெளிவாகிறது.
Also Read: பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆடு, கோழி பலியிட தடை விதிப்போம் என்றாரா அண்ணாமலை?
Conclusion
சவுதி அரேபியாவில் தங்கத்தால் செய்யப்பட்ட மோடி சிலை என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
News Report From, Indian Express, Dated January 20, 2023
YouTube Video From, Jansatta, Dated January 21, 2023
YouTube Video From, BBC News Marathi, Dated January 21, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)