Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
“ஆக்ஸிஜன் இல்லாமல் 1000 பேர் இறந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விடமாட்டோம்” என்று விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியா முழுவதும் கொரானா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்து வருகின்றது. கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஆக்ஸிஜன் இல்லாததால் சரியான சிகிச்சை இன்றி கொரானா நோயாளிகளின் இறப்பு வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்தியாவிற்கு வெளி நாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் கொள்முதல் செய்ய இந்திய அரசு முடிவெடுத்து அதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றது. தற்போது சவூதி அரேபியாவிலிருந்து 80 டன் ஆக்ஸிஜன் கப்பல் மூலம் இந்தியாவிற்கு வரவிருப்பதாக தகவல் வந்துள்ளது.
இதுக்குறித்த செய்தியை இங்கே, இங்கே படிக்கலாம்.
இதனிடையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் நிறுவனம் உச்சநீதி மன்றத்தை நாடியுள்ளது.
இதற்கு எதிர்ப்பும் ஆதரவுமாக பல கருத்துக்கள் பரவியிருந்த சூழலில், “ஆக்ஸிஜன் இல்லாமல் 1000 பேர் இறந்தாலும் சரி, ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் ஆக்ஸிஜன் மெஷின்களை இயங்க அனுமதிக்க விட மாட்டோம்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/qndWR

Archive Link: https://archive.ph/rfDGP

Archive Link: https://archive.ph/5uefT
சமூக வலைத்தளங்களில் பரவுவதுபோல் “ஆக்ஸிஜன் இல்லாமல் 1000 பேர் இறந்தாலும் , ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் ஆக்ஸிஜன் மெஷின்களை இயங்க அனுமதிக்க விட மாட்டோம்” என்று திருமாவளவன் கூறினாரா என்பதை அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, இந்த ஆலைக்கு எதிராக நடந்த போராட்டமும், அதன் காரணமாக நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்த 13 அப்பாவிகளும்தான்.
வேதாந்தா குழுமம் மூடிய ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஏற்கனவே பல வழிகளில் முயற்சித்தது. ஆனால் அம்முயற்சிகள் ஏதும் பலனளிக்காத சூழலில், தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்ற சூழலை தனக்கு சாதகமாக்கி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிகள் எடுத்து வருகின்றது.
இதுத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுக்குறித்த செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.
இவ்விஷயமானது பெருவாரியான தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன், வைகோ உள்ளிட்ட சில தலைவர்களும் இந்த விஷயத்தை பலமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதில் திருமாவளவன், “ஆக்ஸிஜன் இல்லாமல் 1000 பேர் இறந்தாலும் சரி, ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் ஆக்ஸிஜன் மெஷின்களை இயங்க அனுமதிக்க விட மாட்டோம்” என்று பேசியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து, உண்மையில் திருமாவளவன் இவ்வாறு பேசினாரா என்பதை அறிய இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
நம் ஆய்வில் திருமாவளவன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்த மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அப்பதிவில், “Modi Govt must stop sidelining people’s sentiments, & abandon efforts to reopen Sterlite in the guise of oxygen manufacturing. “Even if 1000 of us die, we won’t let Sterlite open” – let this battle cry of the working people fall on the deaf ears of the ruling class.” என்று பதிவிடப்பட்டிருந்தது.

திருமாவளவன் அவர்களின் இப்பதிவை தமிழில் மொழிப்பெயர்த்தால்,
“மோடி அரசு மக்களின் உணர்வுகளை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும், மேலும் ஆக்ஸிஜன் உற்பத்தி என்ற போர்வையில் ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்.
“எங்களில் 1000 பேர் இறந்தாலும், நாங்கள் ஸ்டெர்லைட்டை திறக்க விடமாட்டோம்” – உழைக்கும் மக்களின் இந்த போர் முழக்கம், ஆளும் வர்க்கத்தின் கேளாத காதுகளில் கேட்கட்டும்”
என்பதே பொருளாக வரும்.
இதன்படி பார்க்கையில் திருமாவளவன் அவர்கள் “ஆக்ஸிஜன் இல்லாமல் 1000 பேர் இறந்தாலும் சரி” என்று பதிவிட்டதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதும், திருமாவளவன் அவர்கள் அவ்வாறு ஒரு எண்ணத்தில் இப்பதிவை பதிவிடவில்லை என்பதும் நம்மால் உணர முடிகின்றது.
திருமாவளவன் அவர்களின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பதிவை, கொரானா நோயாளிகளுக்கு எதிரான பதிவாக விஷமிகள் திசைத் திருப்ப முயலுகின்றார்கள் என்பது நமது ஆய்வின் மூலம் தெளிவாகின்றது.
ஆக்ஸிஜன் இல்லாமல் 1000 பேர் இறந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விடமாட்டோம் என்று தொல்.திருமாவளவன் அவர்கள் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Thirumavalavan Twitter handle: https://twitter.com/thirumaofficial/status/1385626498892066817
Business Today: https://www.businesstoday.in/current/economy-politics/saudi-arabia-to-ship-80-metric-tonnes-of-liquid-oxygen-to-india/story/437543.html
Samayam Tamil: https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-government-opposes-opening-of-sterlite-plant/articleshow/82196029.cms
Hindu Tamil: https://www.hindutamil.in/news/india/662539-sterlite.html
One India Tamil:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 10, 2025
Vijayalakshmi Balasubramaniyan
December 9, 2025
Ramkumar Kaliamurthy
December 9, 2025