மதிமுக பொதுச்செயலாளரான வைகோ, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவைச் சந்தித்து பொன்னாடை போர்த்துவது போன்ற புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Fact check/ Verification:
பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவிற்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சால்வை அணிவிப்பது போன்ற படம் ஒன்று “கூகுளில் தேடினாலும் கிடைக்காத படம். லல்லு மவன் தேஜஸ்வி யாதவ் உடன் நம்ம லெக் தாத்தா” என்கிற வாசகத்துடன் வைரலாகி வருகின்றது.
https://www.facebook.com/photo/?fbid=380918833330496&set=a.144692813619767
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
வைகோவும், தேஜஸ்வி யாதவும் இருப்பது போன்ற அப்புகைப்படத்தைப் பார்க்கும்போதே அது எடிட் செய்யப்பட்ட படம் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.
மற்றொருவரின் தலைப்பகுதியை புகைப்படத்தில் நீக்கிவிட்டு அந்த இடத்தில் தேஜஸ்வியின் தலைப்பகுதியை இணைத்துள்ளனர்.
அப்புகைப்படத்தில் உண்மையில் இருப்பது யார்? வைகோ உண்மையில் யாருக்கு பொன்னாடை போர்த்தியுள்ளார் என்பது குறித்து அறிய மேற்கண்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தோம்.
அத்தேடலின் முடிவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அப்புகைப்படத்தில் வைகோ பொன்னாடை போர்த்துவது நமக்குத் தெரிய வந்தது.

மேலும், இப்புகைப்படம் குறித்து உரிய வார்த்தைகளுடன் யூடியூபில் தேடிய போது கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற முரசொலி பவள விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பதும் உறுதியாகியது.
பவளவிழாவின்போது மு.க.ஸ்டாலிக்கு வைகோ பொன்னாடை போர்த்திய புகைப்படத்தை எடிட் செய்து, தேஜஸ்வி யாதவுக்கு வைகோ பொன்னாடை போர்த்துவது போன்ற போலி புகைப்படத்தை உருவாக்கியுள்ளனர். அதன் வீடியோ இணைப்பினையும் இங்கே உங்களுக்காக இணைத்துள்ளோம்.
conclusion:
இதன்மூலம், வைகோ, தேஜஸ்வி யாதவுக்கு பொன்னாடை போர்த்துவது போன்று சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது;போலியானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தகுந்த ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். வாசகர்கள் யாரும் இத்தவறான புகைப்படத்தை ஷேர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Result: Fabricated
Our sources:
youtube: https://youtu.be/R4snKE8mGHY
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)