6 தொகுதிகளிலும் டெபாசீட் இழந்தாலும் இந்துக்களின் ஓட்டு தங்களுக்குத் தேவையில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியதாக கூறி புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 6) தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது.
ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பிட்ட கட்சியைக் குறித்தோ, அல்லது கட்சியினரைக் குறித்தோ நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ கருத்துக்களை பரப்பும் செயல் இன்னும் முடிவடைந்தபாடில்லை.
இப்போது இவ்வரிசையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், 6 தொகுதிகளிலும் டெபாசீட் இழந்தாலும் இந்துக்களின் ஓட்டு தங்களுக்குத் தேவையில்லை என்று கூறியதாக கூறி தந்தி தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/9qzfw

Archive Link: https://archive.ph/eDSiZ

Archive Link: https://archive.ph/jRbms
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதுபோல், 6 தொகுதிகளிலும் டெபாசீட் இழந்தாலும் இந்துக்களின் ஓட்டு தங்களுக்குத் தேவையில்லை என்று திருமாவளவன் அவர்கள் பேசினாரா என்பதை அறிய, தந்தி தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இவ்வாறு ஒரு புகைப்படச் செய்தி பதிவிடப்பட்டுள்ளதா என்பதை தேடினோம்.
அவ்வாறு தேடியதில், இப்புகைப்படச் செய்தியின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்றாகும்.
இத்தகவலை தந்தி தொலைக்காட்சியே தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் உறுதி செய்திருந்தது.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது 6 தொகுதிகளிலும் டெபாசீட் இழந்தாலும் இந்துக்களின் ஓட்டு தங்களுக்குத் தேவையில்லை என்று திருமாவளவன் அவர்கள் பேசியதாக பரவும் புகைப்படச் செய்தி பொய்யான ஒன்று என்பது நமக்கு உறுதியாகின்றது.
Conclusion
6 தொகுதிகளிலும் டெபாசீட் இழந்தாலும் இந்துக்களின் ஓட்டு தங்களுக்குத் தேவையில்லை என்று திருமாவளவன் அவர்கள் பேசியதாகப் பரப்பப்படும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்
Result: False
Our Sources
Thanthi TV:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)