Claim: நடிகர் விஷாலுக்கு லட்சுமி மேனனுடன் திருமணம்
Fact: நடிகர் விஷால் இத்தகவலை மறுத்துள்ளார்.
நடிகர் விஷாலும் நடிகை லட்சுமி மேனனும் அவரவர் குடும்பத்தார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக ஊடகங்களில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.



ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதா?
Fact Check/Verification
நடிகர் விஷாலுக்கு லட்சுமி மேனனுடன் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அதில் இத்தகவல் பொய்யானது என அறிய முடிந்தது.
நடிகர் விஷாலே இத்தகவல் பொய்யானது என்று உறுதிப்படுத்தி அவரது டிவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பொதுவாகவே பொய் செய்தி அல்லது வதந்திகளை நான் கண்டுக்கொள்வதில்லை. ஏனென்றால் அது பயனற்றது. இருப்பினும் எனக்கும் லட்சுமி மேனனுக்கும் திருமணம் என்று பரவும் தகவலானது பொய்யானது என்று மறுக்கிறேன். இத்தகவலானது முற்றிலும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது.
இந்த மறுப்பை கொடுப்பதற்கு காரணம் இதில் ஒரு பெண் சம்மந்தப்பட்டுள்ளார். அவர் நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து, அவரது மரியாதையை நீங்கள் கெடுக்கின்றீர்கள்.
நான் எப்போது யாரை திருமணம் செய்யவிருக்கின்றேன் என்பது அவ்வளவு பெரிய சரித்திர விஷயமல்ல. எனக்கு திருமணம் நடக்கும்போது நானே அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்.
என்று விஷால் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Also Read: சுதந்திர தின பாதுகாப்பு பணியில் பெண் ராணுவ வீரர் என்று பரவும் 2019ஆம் ஆண்டு புகைப்படம்!
Conclusion
நடிகர் விஷாலுக்கு லட்சுமி மேனனுடன் திருமணம் நடக்கவிருப்பதாக பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Tweet from Actor Vishal
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)