ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkசுதந்திர தின பாதுகாப்பு பணியில் பெண் ராணுவ வீரர் என்று பரவும் 2019ஆம் ஆண்டு புகைப்படம்!

சுதந்திர தின பாதுகாப்பு பணியில் பெண் ராணுவ வீரர் என்று பரவும் 2019ஆம் ஆண்டு புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: சுதந்திர தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரமங்கை  

Fact: வைரலாகும் புகைப்படம் பழைய புகைப்படமாகும்.

சுதந்திர தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரமங்கை என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது பாதுகாப்பு பணியில் வீரமங்கை.” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

Screenshot from Twitter @Bhairavinachiya

Archived Link

Screenshot from Facebook/Angel Isabel

Facebook Link

Screenshot From Facebook/janakarthik

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை ‘முஸ்லீம் எக்ஸ்பிரஸாக’ மாற்றினரா இஸ்லாமியர்கள்?

Fact Check/Verification

சுதந்திர தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரமங்கை என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம். வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

அப்போது, கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 13 அன்று Times Of India இணையப்பக்கத்தில் “Full-dress rehearsal for Independence Day held at Red Fort” என்கிற புகைப்படத்தொகுப்பில் இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து, ஆகஸ்ட் 14, 2023 அன்று “Independence Day: Delhi decked up for celebrations” என்று இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு வருடமும் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

எனவே, இப்புகைப்படம் இந்த வருட சுதந்திர தின விழாவில் எடுக்கப்பட்டது அல்ல; 2019ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்கு முந்தைய ஒத்திகையில் எடுக்கப்பட்டது என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

Also Read: ஸ்மிருதி இராணி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்றாரா ஈ.பி.எஸ்?

Conclusion

சுதந்திர தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரமங்கை என்று பரவும் புகைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Image Gallery From, Times Of India, Dated August 13, 2019

Image Report From, Times Of India, Dated August 14, 2019

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular