சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஇந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO -...

இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டது.

Fact: UNESCO இத்தகவலை மறுத்துள்ளது.

இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Screenshot from Twitter@sevvalagan2

Twitter Link | Archived Link

இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO - வால் அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/rajenderd

Archived Link

இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO - வால் அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/ukaaz.jailani

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஸ்மிருதி இராணி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்றாரா ஈ.பி.எஸ்?

Fact Check/Verification

இந்திய தேசியகீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து UNESCO-வின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுக்குறித்து செய்தி ஏதும் வெளியிடப்பட்டதா என தேடினோம். ஆனால் இவ்வாறு எந்த ஒரு செய்தியும் UNESCO வெளியிட்டிருக்கவில்லை.

இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO - வால் அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்
Screengrab from UNESCO

தொடர்ந்து UNESCO – வின் சமூக ஊடகப் பக்கங்களிலும் தேடினோம். அதிலும் இவ்வாறு எந்த அறிவிப்பும் இல்லை.

இதனையடுத்து ஊடகங்களில் இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2008 ஆம் ஆண்டே இத்தகவலானது பரவியுள்ளதையும், இந்தியா டுடே UNESCO-வுக்கு மின்னஞ்சல் அனுப்பி இத்தகவல் குறித்து விளக்கம் பெற்று அதை செய்தியாக வெளியிட்டுள்ளதையும் காண முடிந்தது.

UNESCO செய்திப்பிரிவின் தலைவர் சூ வில்லியம்ஸ் இந்திய தேசிய கீதம் உலகின் சிறந்த தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டதாக பரவும் முற்றிலும் தவறானது என்று தெளிவு செய்ததாக இந்தியா டுடே அச்செய்தியில் தெரிவித்திருந்தது.

இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO - வால் அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்
Screengrab from India today

இதனைத் தொடர்ந்து பல்வேறு காலக்கட்டத்தில் இந்த தவறான செய்தியானது சமூக ஊடகங்களில் பரவியுள்ளதையும், இது பொய்யான செய்தி என்று தெரிவித்து ஊடகங்களில் செய்தி வந்திருப்பதையும் நம்மால் காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

Also Read: ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை ‘முஸ்லீம் எக்ஸ்பிரஸாக’ மாற்றினரா இஸ்லாமியர்கள்?

Conclusion

இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from India Today, Dated September 30, 2008

UNESCO Website

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular