பிரான்ஸில் சாலையின் நடுவில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் என்பதாக வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பிரான்ஸில் சாலையின் நடுவில் தொழுகை செய்த இஸ்லாமியர்களை பொதுமக்களே அகற்றும் வீடியோ என்பதாக அந்த வீடியோ பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கோவிட் குறித்த செய்திகளைப் பகிரும் வாட்ஸ் அப் குழுக்கள் மீது நடவடிக்கை என்கிற செய்தி உண்மையா?
Fact Check/Verification
பிரான்ஸில் சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர் என்று வீடியோ தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்தோம்.
குறிப்பிட்ட பதிவில் தெரிவித்திருப்பது போன்று சாலையில் அமர்ந்திருந்தவர்கள் அந்த வீடியோவில் வலுக்கட்டாயமாக அகற்றப்படுகின்றனர். ஆனால், அவர்கள் தொழுகை நடத்தியது போன்ற எந்தப் பதிவும் அந்த வீடியோவில் இல்லை. எனவே, வீடியோவின் உண்மை நிலை என்பது குறித்து ஆராய்ந்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் தேடலுக்கு உள்ளாக்கியபோது, கடந்த டிசம்பர், 2022ல் பிரெஞ்சு மொழியில் வெளியான சில செய்திகள் நமக்குக் கிடைத்தது.


அதில் இடம்பெற்றிருந்த செய்தி என்னவெனில், காலநிலை மாற்றப் போராட்டக்காரர்களை சாலையில் சென்ற வாகனவோட்டிகளே சாலையோரம் இழுத்து அகற்றிச் சென்றனர் என்று வெளியாகியிருந்தது.

ட்விட்டரிலும் இதுகுறித்த விரிவான வீடியோ ஒன்றும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவிட்டாரா முதல்வர் ஸ்டாலின்?
Conclusion
பிரான்ஸில் சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Daily Express report, December 2, 2022
Ouest France report, November 26, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)