ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரதமர் மோடி 4:20 என்று மணி காட்டும் கடிகாரத்தின் கீழ் நிற்பதாக பரவும் போலி புகைப்படம்!
Fact Check/Verification
ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் தவறானது என்பதை அறிய முடிந்தது.
தமிழக அரசு கடந்த வியாழனன்று (டிசம்பர் 22) வருடாந்திரம் அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000/- ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட தமிழக முதலமைச்சர் ஆணையிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இந்த ஆணை குறித்து டிவீட் செய்யப்பட்டிருந்தது. அதிலும் தமிழக முதலமைச்சர் சர்க்கரை வழங்க ஆணையிட்டதாகவே குறிப்பிடப்பட்டிருந்து.
இதனைத் தொடர்ந்து, வைரலாகும் இத்தகவல் சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம். இதில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து சன் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் மனோஜைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவர் அந்த நியூஸ்கார்ட் போலியானது என தெளிவுப்படுத்தினார்.
Also Read: உலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக பரவும் தவறான வீடியோ!
Conclusion
ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Tamilnadu Government’s Press release, Dated 22/12/2022
Tweet, from @TNDIPRNEWS Dated 22/12/2022
Phone Conversation with Manoj, Digital Head, Sun News, Dated 26/12/2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)