Claim: பாஜக சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Fact: வைரலாகும் பத்திரிக்கைச் செய்தி போலியானதாகும்.
பாஜகவின் சமூக ஊடக அணியின் மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார் அண்மையில் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து சமூக ஊடக பிரிவின் மாநில செயலாளராக இருந்த திலீப்கண்ணன் என்பவரும் பாஜகவிலிருந்து விலகியுள்ளார்
இதனையடுத்து பாஜகவின் சமூக ஊடக பிரிவுக்கு தலைவராக சவுக்கு சங்கரும், செயலாளராக பிரதீப் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு பாஜக பத்திரிக்கைச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: அமெரிக்க 100 டாலர் கரன்சியில் அம்பேத்கர் புகைப்படம் என்று பரவும் போலியான தகவல்!
Factcheck / Verification
பாஜக சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கைச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் இவ்வாறு அறிக்கை வெளிவந்துள்ளதா என ஆராய்ந்தோம். இதில் இவ்வாறு ஒரு அறிக்கை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் பத்திரிக்கைச் செய்தி குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் பத்திரிக்கைச் செய்தி போலியானது என்று தெளிவுப்படுத்தினார்.
தொடர்ந்து தேடுகையில் சவுக்கு சங்கரும், பிரதீப்பும் இந்த தகவல் பொய் என்று அவர்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதை காண முடிந்தது.
Also Read: Fact Check: மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான இலவச லேப்டாப் திட்டம் என்று பரவும் தகவல் உண்மையா?
Conclusion
பாஜக சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் பத்திரிக்கைச் செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Satire
Sources
Phone conversation with SG Surya, BJP State Secretary, dated March 07 2023
Tweet from @veera284, dated March 07, 2023
Tweet from @voiceofsavukku, dated March 06, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)