ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckFact Check: அமெரிக்க 100 டாலர் கரன்சியில் அம்பேத்கர் புகைப்படம் என்று பரவும் போலியான தகவல்!

Fact Check: அமெரிக்க 100 டாலர் கரன்சியில் அம்பேத்கர் புகைப்படம் என்று பரவும் போலியான தகவல்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
அமெரிக்க 100 டாலர் கரன்சியில் அம்பேத்கர் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

Fact
அமெரிக்க கரன்சியில் மற்ற நாட்டு தலைவர்கள் புகைப்படம் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. வைரலாகும் புகைப்படத்தகவல் போலியானதாகும்.

அமெரிக்க 100 டாலர் நோட்டில் அம்பேத்கர் படம் இடம்பெற்றுள்ளதாகப் புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அமெரிக்க டாலர்

”அமெரிக்க நாணயத்தில் டாக்டர் அம்பேத்கரின் அட்டைப்படம். கடந்த 15 வருட வரலாற்றில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களில் உலகையே பாதித்த மாணவன். நம் இந்தியாவின் இனிய குழந்தை டாக்டர் பி.ஆர். அமெரிக்க அரசு அம்பேத்கர் என்று முடிவு செய்து அவர்களின் உருவப்படத்தை 100 டாலர் நோட்டில் அச்சிட்டுள்ளது” என்று பகிர்ந்து வருகின்றனர்.

அமெரிக்க டாலர்
Screenshot From Facebook/asad.venkat
Screenshot from Facebook/elayendiran.c.5

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை என்று பரவும் தவறான வீடியோ!

Fact Check / Verification

அமெரிக்க 100 டாலர் நோட்டில் அம்பேத்கர் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாகப் பரவுகின்ற தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

அமெரிக்காவில் உண்மையில் டாலரில் அம்பேத்கர் படம் இடம்பெற்றுள்ளதாக செய்தியோ, அறிவிப்போ வெளியாகியிருக்கவில்லை என்பது நம்முடைய தேடலில் தெரிய வந்தது. கடந்த பல வருடங்களாகவே இத்தகவல் பரவி வருகின்ற நிலையில், இதுகுறித்து அமெரிக்காவின் US Currency Education இணையதளப்பக்கத்தில் தேடினோம்.

அதன்படி, கடந்த 1914 ஆம் ஆண்டு அமெரிக்கா முதன்முதலில் பெஞ்சமின் ப்ராங்க்ளின் மற்றும் தொழிலாளர்கள், அமெரிக்கா, அமைதி உள்ளிட்ட வாசகங்களுடன் டாலர் கரன்சி வெளியிட்டது. தொடர்ந்து, 1929 ஆம் ஆண்டு இந்த வடிவமைப்பில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், பெஞ்சமின் ப்ராங்க்ளின் படம் தொடர்ந்து வருகிறது.

அனைத்து அமெரிக்க டாலர் கரன்சிகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை இங்கே காணலாம். ஆனால், மற்ற நாட்டு தலைவர்கள் படங்கள் எதுவும் இதுவரை அமெரிக்க டாலர்களில் இடம்பெறவில்லை என்பதை இதன்மூலம் அறியலாம்.

இணையதளங்களில் அமெரிக்க கரன்சியில் நம்முடைய புகைப்படங்களை எடிட் செய்துகொள்ளும் வகையில் வசதிகள் இருக்கின்றன. இங்கே இணைக்கப்பட்டுள்ள இணையதளம் ஒன்றின் எடிட் வசதிக்கான புகைப்படத்தில் அம்பேத்கர் புகைப்படத்தின் அதே வரிசை எண் இடம்பெற்றுள்ளதைக் காணமுடியும்.

Also Read: Factcheck: பரோடா வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக கூறியதால் டெபாசிட் தொகையை எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்தனரா?

Conclusion

அமெரிக்க 100 டாலர் நோட்டில் அம்பேத்கர் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாகப் பரவுகின்ற தகவல் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular