ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஜூலை, 2021

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்தாரா அண்ணாமலை?

மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானதாகும்.

சென்னை அரும்பாக்கம் மக்கள் நிலை என்று பரவும் சில புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்டதா?

சென்னை அரும்பாக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் நிலை என்று பரவும் புகைப்படங்களில் பெரும்பாலானவை தவறானதாகும்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை கைது செய்ய வேண்டும் என்றாரா?

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை கைது செய்யக் கோரி பதாகை ஒன்றை ஏந்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.  சமீபத்தில்...

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியளித்ததாக வெளியான செய்தி போலியா?

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியளித்ததாகக் கூறியது பொய் என்பதாகப் பரவுகின்ற தகவல் ஆதாரமற்றதாகும்.

ரங்கராஜ் பாண்டே சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் இருப்பதாக வதந்தி

ரங்கராஜ் பாண்டே சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் இருப்பதாக பரவும் புகைப்படம் தவறானதாகும்.

திருப்பதி ஏழுமலையானுக்கு அபிஷேக பால் கொடுக்கும் புங்கநூர் பசுவா இது?

திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் 100 லிட்டர் அபிஷேகப் பால் கொடுக்கும் விலையுயர்ந்த புங்கநூர் பசு என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானதாகும்.

உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்று பகிரப்படும் மற்ற வீராங்கனைகளின் புகைப்படங்கள்!

உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் புகைப்படம் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாலும் படங்கள் தவறானதாகும்.

இந்தியாவில் முதன்முதலில் கட்சிசார் இளைஞர் அணியைத் தொடங்கியது திமுகவா?

இந்தியாவில் முதன்முறையாக கட்சி சார்ந்த இளைஞர் அணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்று பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?

டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read