நியூஸ் செக்கரின் முக்கிய நோக்கம், சமுதாயத்தில் உலாவும் போலி செய்திகளை கட்டுப்படுத்துவதாகும். சமூக ஊடகங்களில் பொது நபர்கள், ஆளுமைகள், ஊடகங்கள் மற்றும் பயனர்கள் அளிக்கும் அறிக்கைகள் மற்றும் கூற்றுக்களை ஆராய்வதன் மூலமாக உண்மையை நாங்கள் வெளிக்கொணர்கிறோம். பொதுமக்கள் மற்றும் வாக்களர்களுக்கு சமூகத்தில் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள், தவறான பிரச்சாரம் மற்றும் தெரிந்தே உண்மையற்ற தகவல்களை பரப்பும் நோக்கையும் எடுத்துக்கூறி அறிவூட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளோம்.
உண்மைகளைக் கண்டறிவதற்கான சூழ்நிலைகள் தற்போது தொடர்ச்சியாக வளர்ந்துவருகின்ற காலகட்டத்திலும் கூட எண்ணற்ற கூற்றுகளின் பின்புலம் சரிபார்க்கப்பட இயலாமல் உள்ளது. இந்த இடைவெளியை நிரப்பவே நியூஸ்செக்கர் பாடுபடுகிறது. உண்மையறிவதையே நோக்கமாக கொண்டுள்ளது.
எங்கள் நோக்கம் எந்தப்பக்கமும் சார்ந்திருக்காமல் தனித்துவமாக உண்மையுடன் செயல்படுவதாகும். நியூஸ்செக்கர் உண்மைக்கும், சத்தியத்திற்கும் மட்டுமே செயலாற்றக்கூடியது; மற்ற எதற்கும் அல்ல.
நாங்கள் உண்மை சரிபார்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் அதனை ஒரு சேவையாக வழங்கும் வகையில் முன்னோடியாக செயல்பாட்டினைத் துவங்கினோம். எந்த கூற்றையும் யார் வேண்டுமானாலும் எங்களுக்கு நாங்கள் பணியாற்றும் மொழிகளில் அனுப்ப முடியும்; அதன் மெய்தன்மையை நாங்கள் சரிபார்த்து உண்மையறிந்து கூறுகிறோம். வாட்ஸ் அப் உள்ளிட்ட குறுஞ்செய்தி செயலிகள் மூலமாக இதனை நாங்கள் செய்கிறோம்.
இதன்மூலம் எங்களால் உண்மையறியும் சோதனைகளை எளிதாக யாரும் அணுகும் வகையிலும், அதற்கான முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு அதை கொண்டு செல்லும் வகையிலும் செயலாற்ற முடிகிறது.
உண்மையரியும் சோதனைக்கு கூற்றுகளை அனுப்ப எங்கள் வாசகர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஒரு கதை அல்லது அறிக்கை உண்மை சோதனைக்கு தகுதியானது என்று நீங்கள் நம்பினாலோ அல்லது வெளியிடப்பட்ட உண்மைச் சரிபார்ப்பு கட்டுரையில் பிழை இருந்தாலோ தயவுசெய்து எங்களுடைய checkthis@newschecker.in என்ற முகவரிக்கு அதனை அனுப்பவும் அல்லது எங்களை வாட்ஸ் அப் மூலமாக 9999499044 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளவும்
நியூஸ்செக்கர்,டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்.சி மீடியா நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சுயாதீனமான உண்மைச் சரிபார்ப்பு முன்னெடுப்பு முயற்சியாகும்.
NC Media Networks இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு தனியார் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் Corporate Identification Number (CIN) U92490DL2019PTC353700 (ஒருங்கிணைப்பு சான்றிதழ்) ஆகும். எங்களுடைய சமீபத்திய நிதி வருமானம் உள்ளிட்ட எங்கள் விவரங்கள் அனைத்தும் MCA இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
நியூஸ்செக்கர் ஒரு சுயநிதி நிறுவனமாக செயல்படுகிறது. மேலும், ஒரு சில சமூக வலைத்தள பக்கங்களுக்கும், குறுஞ்செய்தி செயல்தளங்களுக்கும் மூன்றாம் தரப்பு உண்மை சரிபார்ப்பு குழுவாக நாங்கள் பணியாற்றுகிறோம். எங்கள் சேவைக்கான கட்டணத்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் நாங்கள் எந்த ஒரு நன்கொடையையும் நிதியுதவியையும் ஏற்றுக்கொள்வதில்லை; எந்த ஒரு அரசியல்வாதி/அரசியல் கட்சி அல்லது அவற்றுடன் தொடர்புடைய அரசியல் அமைப்புகளுடன் பணியாற்றுவதில்லை.
2020-21, 2021-22, 2022-23, 2023-24, 2024-25 நிதியாண்டில் எங்கள் வருவாயில் 5% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கிய நிறுவனங்கள் பின்வருமாறு:
மெட்டா INC
மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட்
பைட்டான்ஸ் பிரைவேட் லிமிடெட்