வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025
வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

Monthly Archives: செப்டம்பர், 2021

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

மெஸ்ஸி விட்டு சென்ற இடம் இன்பநிதிக்கானது என்றாரா ஊடகவியலாளர் செந்தில் வேல்?

மெஸ்ஸி விட்டு சென்ற இடம் இன்பநிதிக்கானது என்று செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.

நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தற்போது கூறினாரா நளினி சிதம்பரம்?

நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று நளினி சிதம்பரம் கூறியதாகப் பரவும் செய்தி பழையதாகும்.

நீட் விவகாரத்தில் திமுக பொய் வாக்குறுதிகளால் மாணவர்களை கொலை செய்துக் கொண்டிருக்கின்றது என்றாரா செந்தில் வேல்?

நீட் விவகாரத்தில் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்ததாக செந்தில்வேல் ஆதங்கம் தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ஓலா நிறுவனம் தனது இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் என்று பெயர் சூட்டப்படும் என அறிவித்ததா?

ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் தயாரிக்கும் இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது என்பதாக பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளிப்போம் என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?

கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவளிக்கத் தயார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டதாகும்.

இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்ற முடிவை ஏற்க முடியாது என்றாரா நட்டா?

இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்க முடியாது என்று ஜே.பி.நட்டா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை என்றாரா சீமான்?

திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன் என்றாரா ஹெச்.ராஜா?

மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன்  என்று ஹெச். ராஜா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் நோட்டு எண்ணும் மெஷின் இருக்கிறதா?

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் நோட்டு எண்ணும் மெஷின் இருப்பதாகப் புகைப்படம் ஒன்று குறித்து பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read