திங்கட்கிழமை, அக்டோபர் 25, 2021
திங்கட்கிழமை, அக்டோபர் 25, 2021
HomeCoronavirusதமிழில் 1914 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கைமுறை வைத்திய நூலொன்றில் கொரோனாவுக்கு மருந்தா ? வைரலாக...

தமிழில் 1914 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கைமுறை வைத்திய நூலொன்றில் கொரோனாவுக்கு மருந்தா ? வைரலாக பரவிய புகைப்படத்தின் உண்மை

உரிமைகோரல்

தமிழில் 1914 ஆம் வெளியிடப்பட்ட கைமுறை வைத்திய நூலொன்றில் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாகவும் ,இந்த மருந்தை அனைவரும் சாப்பிடுங்கள் என்றும் பகிரப்பட்டது.

சரிபார்ப்பு

கொரோனா வைரசை குணப்படுத்தும் என பல்வேறு மருத்துவக் குறிப்புகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. 

சித்தர்கள் ,முனிவர்கள் எழுதிய சித்த வைத்திய மருந்துகளும் வைத்திய முறையும் இந்தியாவிலிருந்து  சீனாவிற்கு சென்றது என்பதில் எந்த மாற்றமும் இல்லை .சித்த மருத்துவ முறையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 

இந்நிலையில், 1914-ம் ஆண்டு செய்யப்பட்டுப் பாட்டி வைத்தியம் எனும் புத்தகத்தில் ” கோரோனா மாத்திரை ” எனும் மருந்து இருப்பதாகவும், அதனை உடனே சாப்பிடுமாறு அப்புத்தகத்தின் பக்கம் பரிந்துரை செய்யப்பட்டு பகிரப்பட்டு வந்தது.

உண்மை சோதனை

கூகிள் ரிவேர்ஸ் இமேஜில் இந்த புகைப்படத்தைத்  தேடுகையில் இது “கோரோசன மாத்திரை” செய்யும் முறை  என்பது தெரியவந்தது ,இந்த நூலின் பெயர் “கைமுறை பாக்கெட் வயித்தியம்” என்றும் இந்த நூல் பூ.சு.துளசிங்கமுதலியாரால் ஏட்டுப் பிரதியும் கைமுறையும் அச்சுப் பிரதியுங்கொண்டு ஆய்ந்தெழுதி முடிவு  பெற்றது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நூலின் பிரதி யாரிடம் இருக்கிறதெனத் தெரியவில்லை. கோரோசன மாத்திரை பற்றி தேடுகையில் அதனுடைய பயன்பாட்டைப் பற்றித் அறிந்து கொண்டோம் .சித்த மருத்துவத்தில் நோய்களைக் குணமாக்கும் முக்கிய மருந்தாக சேர்க்கபடுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் சுரம், மாந்தம், காணை நோய் முதலியவற்றை குணமாக்கும் தன்மை கோரோசனை மருந்துக்கு உண்டு என்று அறிகிறோம்.

முடிவுரை 

பாக்கெட் அளவுள்ள இந்த நூலின் 61 ஆம் பக்கத்தில் கோரோன மாத்திரை என்ற பெயரில் இந்த மருந்து பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதில், “ச” எழுத்தை நீக்கி போட்டோஷாப்பில் கோரோசன என்ற சொல்லை கோரோன என்று எடிட் செய்யப்பட்டிருக்கிறது.சித்த மருத்துவத்தை மேற்கொள்காட்டி தவறான செய்திகள் பரவும் பட்சத்தில் மக்கள் அதனையே நாடிச் செல்லும் நிலை உருவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular