Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Coronavirus
உரிமைகோரல்
பாகிஸ்தான் இன்றைய நிலை என்று காஷ்மீர் வேண்டாம், hydroxychloroquine கொடுங்கள் என்று இந்தியாவை நோக்கி கேட்பதாக இருக்கும் பதாகை.
சரிபார்ப்பு
கொரோனா வைரஸ் அதிகம் பரவிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் எங்களுக்குக் காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொடுங்கள் என்று பதாகை வைத்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வந்தது நியூஸ்செக்கரில் இதன் உண்மைத் தன்மையைக் கண்டறியத் தொடங்கினோம் .
உண்மை சோதனை
ரிவேர்ஸ் இமேஜில் இந்த புகைப்படத்தை தேடுகையில் 2019ம் ஆண்டு இதே புகைப்படம் “we dont want kashmir give us virat kohli “என்று உலகம் முழுவதும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வந்திருக்கிறது .இந்த வைரல் புகைப்படம் “நியூஸ் 18 கன்னடா” மற்றும் “மனோரமா நியூஸ்” போன்ற செய்திகளிலும் இந்த புகைப்படம் வைரலாகி இருந்தது.
இந்த வைரல் புகைப்படத்தை சில வெரிபைட் டிவிட்டர் பக்கங்களில் கூட பகிர்ந்து வந்தனர் ,இது ஒரு தடவை அல்ல பலமுறை இந்த புகைப்படம் வேறு வேறு வார்த்தைகளுடன் பகிரப்பட்டு வந்துள்ளது.
உண்மையில் இந்த புகைப்படம் ஆகஸ்ட் 8, 2016 ஆண்டு காஷ்மீர் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்ஹான் வானியின் மரணத்தைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இளைஞர்கள் பாகிஸ்தான் சார்பு கோஷங்களை எழுப்பியபோது “எங்களுக்கு ஆசாதி வேண்டும்” என்று பிடிக்கப்பட்ட பேனர் என்பதைக் கண்டறிந்தோம் .இந்தியா டுடே பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய முழு விவரங்களையும் கண்டறிந்தோம்.
முடிவுரை
2016-ல் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஆசாதி வேண்டும் என இளைஞர்கள் ஏந்தி இருக்கும் பேனரில் பாகிஸ்தான் நாட்டின் மக்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் கேட்டதாக எடிட் செய்து வைரல் செய்து வருகிறார்கள்.
Sources
Result: False
(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)