ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkசந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலகுவதாகப் பரவும் 2018ஆம் ஆண்டு செய்தி!

சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலகுவதாகப் பரவும் 2018ஆம் ஆண்டு செய்தி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ND கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Fact: வைரலாகும் செய்தி கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகியதாகும்.

சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலகுவதாகப் பரவும் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

“ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ND கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள TDP கட்சியின் இரு அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டார். வெளியில் இருந்து பாஜக ஆட்சிக்கு ஆதரவு தரப்போவதாக தகவல்.” என்று இப்புகைப்படங்கள் பரவுகின்றன.

Screenshot from X @Ksaras219

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலகுவதாகப் பரவும் புகைப்படங்கள் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படங்களை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த மார்ச் 2018ஆம் ஆண்டு ABP News வெளியிட்டிருந்த ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத காரணத்தினால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக வெளியாகிய செய்தியில் இருந்து எடுக்கப்பட்டது என்பது தெளிவாகியது.

குறிப்பிட்ட வீடியோ காட்சிகளே தற்போது சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலக இருப்பதாகப் பரவி வருகிறது என்பது உறுதியாகியது.

 Also Read: சென்னையில் நடைபெற்ற F4 கார் ரேஸில் கலந்து கொண்டாரா நடிகை நிவேதா பெத்துராஜ்?

Conclusion

சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலகுவதாகப் பரவும் புகைப்படங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான செய்தியில் இருந்து எடுக்கப்பட்டவை என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, ABP News, Dated March 07, 2018

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular