செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2024

HomeFact Checkநிவர் புயலின் போது விளம்பரத்தகரம் காற்றில் பறந்து விபத்து ஏற்பட்டதா?

நிவர் புயலின் போது விளம்பரத்தகரம் காற்றில் பறந்து விபத்து ஏற்பட்டதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

நிவர் புயலால் ஏற்பட்ட பெருங்காற்றால் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே விளம்பரத்தகரம் அறுந்து விழுந்து வாகனத்தில் பயணித்தவர் விபத்தில் சிக்கியதாக வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வீடியோ காட்சி
Source: Twitter

Fact Check/Verification:

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி நேற்று கரையைக் கடந்தது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இந்நிலையில், நிவர் புயல் மழை காலகட்டம் ஆரம்பித்ததில் இருந்தே வதந்திகளும் மழை வெள்ளம் போல் பரவி வருகின்றன.

அதில் ஒன்றுதான் சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே விளம்பரப்பதாகை புயல் காற்றில் அறுந்து விழுந்து வாகன ஓட்டிக்கு விபத்து ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களிலும் வீடியோ ஒன்று வைரலானது.

Source: Twitter
Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவானது உண்மையிலேயே நிவர் புயலின் போது எடுக்கப்பட்டதா என்பதை அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்:

நிவர் புயலே கரையைக் கடந்த பிறகும், சமூக வலைத்தளங்களைக் கடக்காத இந்த வீடியோவின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய அது தொடர்பான முக்கிய வார்த்தைகளைக் கொண்டு இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் ஆராய்ந்தோம்.

அவ்வாறு ஆய்வு செய்ததில், லாஜிக்கல் இண்டியன் உள்ளிட்ட மின்னிதழ்கள் இந்த நிவர் புயல் வீடியோ குறித்த உண்மையறியும் சோதனையைச் செய்துள்ளதை நம்மால் கண்டறிய முடிந்தது.

மேலும், அந்த வீடியோவிலிருந்து ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்ததில் ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதியன்று, முகப்புத்தகத்தில் பதிவாகியிருந்த ஒரு வீடியோ காணக்கிடைத்தது.

Facebook Link:

https://fb.watch/20DGNa8_dc/

வீடியோ
Source: Facebook

அதில், மேற்கண்ட வீடியோ ஷேர் செய்யப்பட்டு, கராச்சியருகே விளம்பரப்பதாகை அறுந்து விழுந்த சம்பவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.

இதன்மூலம், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற இந்த வீடியோ, கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகிறது.

Conclusion:

எனவே, நிவர் புயலின்போது விளம்பரத்தட்டி பறந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோ, பாகிஸ்தான் கராச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது நமக்குத் தெரிகிறது. இதனை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தெளிவாக விளக்கியுள்ளோம். தகுந்த ஆதாரங்களுடன் விளக்கமளிக்கப்பட்டுள்ள இந்த தவறான வீடியோவினை வாசகர்கள் யாரும் நம்ப வேண்டாம்;பரப்ப வேண்டாம் என்று நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Result: False

Our Sources:

The Quint: https://www.thequint.com/news/webqoof/video-from-pakistan-viral-as-visuals-of-cyclone-nivar-in-chennai

The Logical Indian: https://thelogicalindian.com/fact-check/motorist-hit-by-signboard-25056

Facebook: https://fb.watch/20DZ0S9HbA/

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular