ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkவாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் புனைவு வீடியோ!

வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் புனைவு வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் வீடியோ!

Fact: வைரலாகும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும்.

“உத்திரபிரதேசம் வாரணாசியில் அகோரிகள் சேர்ந்து ஒரு சிறுவனை நரபலி கொடுக்கும் முயற்சிக்கும் போது ஒரு வாலிபர் அதை தடுக்க முயற்சிக்கும் பதை புதைக்கும் காட்சி என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் வீடியோ

X Link | Archived Link

வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் வீடியோ

Archived Link

வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் வீடியோ

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழகத்தில் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையால் மாற்றம் நிகழும் எனப் பாராட்டினாரா காங்கிரஸ் எம்பி ஜோதிமணி?

Fact Check/Verification

வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் KRB YT VLOG எனும் பயனர் ஐடியை கொண்டஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோவை பிப்ரவரி 08, 2024 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் வீடியோ

தொடர்ந்து தேடுகையில் இதுபோன்று அமானுஷ்யம் தொடர்பாக பல வீடியோக்கள் இந்த  ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் வீடியோ

அவ்வீடியோக்களை காண்கையில் அவை சித்தரிக்கப்பட்ட புனைவு வீடியோவாக இருப்பதற்கான சாத்த்தியக் கூறுகள் இருப்பதை காண முடிந்ததது. இதனையடுத்து இப்பக்கத்தை நடத்தி வரும் அஜ்மீரைச் சேர்ந்த தீபக் சிங் ராவத்தை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு விசாரித்தோம்.

அவர், அப்பக்கத்தில் பகிரப்பட்ட அனைத்து வீடியோக்களும் சித்தரிக்கப்பட்ட புனைவு வீடியோ என்றும், அவ்வீடியோக்களில் காணப்படும் அனைவரும் நடிகர்கள் என்றும் தெரிவித்தார்.  

இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு உண்மையானது அல்ல; அது ஒரு சித்தரிக்கப்பட்ட நிகழ்வு என தெளிவாகின்றது.

Also Read: இந்தியா கூட்டணியின் பாட்னா பேரணி என்று பரவும் 2017ஆம் ஆண்டு புகைப்படம்!

Conclusion

வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Facebook Video, from KRB YT VLOG, Dated February 08, 2024
Phone Conversation with Deepak Singh Rawat, KRB YT VLOG

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular