Claim: தயவு செய்து பிரதமர் மோடி அவர்களுக்கு வாக்களியுங்கள் – பாகிஸ்தான் இஸ்லாமியர்.
Fact: இத்தகவல் தவறானது. அவர் ஆக்ராவைச் சேர்ந்த ஒரு நடிகர் ஆவார்.
பாகிஸ்தான் இஸ்லாமியர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க இந்திய மக்களுக்கு கோரிக்கை விடுப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“அஸ்லாம் அலைக்கும்.நான் பாகிஸ்தானில் இருந்து ஆசிப் சர்தாரி பேசுகிறேன்.எனது இனிய இந்திய இஸ்லாமியர்களே.நீங்க எதிர் கட்சியின் பேச்சை கேட்டு ஏமாந்து விடாதிர்கள் இங்கு எங்கள் நிலைமை கஷ்டமா இருக்கு.நீங்க இந்தியாவில் சுகமா இருக்கிர்கள்.தயவு செய்து பிரதமர் மோடி அவர்களுக்கு வாக்களியுங்கள்” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டாரா?
Fact Check/Verification
பாகிஸ்தான் இஸ்லாமியர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க கோரியதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் ’dhirendra_raghav_79’ என்கிற பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் அது இன்ஸ்டாகிராம் ஐடி என்பதை அறிய முடிந்தது. இன்ஸ்டாவில் அந்த நபரைத் தேடியபோது அவர் நடிகர் மற்றும் டிஜிட்டல் கிரியேட்டர் என்பதை அறிய முடிந்தது. வைரலாகும் வீடியோவைக் கடந்த மார்ச் 23ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளார்.
இந்து, இஸ்லாமியர் மற்றும் பல்வேறு வேடங்களில் அவர் இதேபோன்ற வீடியோக்களைத் தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
அவருடைய ஃபேஸ்புக் உள்ளிட்ட பக்கங்களில் அவருடைய சொந்த ஊர் உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள ஆக்ரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவருடைய வீடியோவே பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் மோடிக்கு ஆதரவு என்று பரவி வருகிறது.
Also Read: அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம் என்றாரா அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்?
Conclusion
பாகிஸ்தான் இஸ்லாமியர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க கோரியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக நமக்கு தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Instagram post from dhirendra_raghav_7, Dated March 23, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)