ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல் சாதிக்கட்சியாக மாற்றி விடுவார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை அண்மைக் காலங்களில் பூதாகரமாகி உள்ளது. இந்நிலையில், எடப்பாடியாரின் தலைமைதான் அதிமுகவிற்கு நல்லது. ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல் ஒரு சாதிக்கட்சியாக மாற்றி விடுவார் என்று அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல் சாதிக்கட்சியாக மாற்றி விடுவார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் இத்தகவலானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டுகளை வெளியிட்டதா என்பதை அறிய, தந்தி தொலைக்காட்சியின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.
இதில் வைரலாகும் நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர்,‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்று பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாஜகவின் சமூக ஊடக அணி தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். இதற்கு அவர், இத்தகவல் பொய்யானது, இதை அண்ணாமலை தெரிவிக்கவில்லை என்று பதிலளித்தார்.
Also Read: கணவன் இறந்தப்பின் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்றாரா பாஜக நாராயணன் திருப்பதி?
Conclusion
ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல் சாதிக்கட்சியாக மாற்றி விடுவார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: Fabricated Context / False
Sources
Phone Conversation with CTR Nirmalkumar, BJP IT Wing President, Dated June 17, 2022
Phone Conversation with Vinoth, Thanthi Tv, Dated June 17, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)