ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஅண்ணாமலை ஒரு மனநோயாளி என்றாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

அண்ணாமலை ஒரு மனநோயாளி என்றாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அண்ணாமலை ஒரு மனநோயாளி என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Fact: இத்தகவல் தவறானது என்று அதிமுக தரப்பும், தந்தி தொலைக்காட்சி தரப்பும் தெளிவு செய்துள்ளது.

“தூக்கத்தில் கனவு காண்பது இயல்பு. ஆனால் நடைப்பயணத்தில் நடக்கும்போதே கனவு காண்பது அரிய வகை நோய். அண்ணாமலை ஒரு மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அண்ணாமலை ஒரு மனநோயாளி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல்

Twitter Link | Archived Link

அண்ணாமலை ஒரு மனநோயாளி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளதா?

Fact Check/Verification

அண்ணாமலை ஒரு மனநோயாளி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் முற்றிலும் பொய்யானது“ என்று பதிலளித்தார்.

இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் தந்தி தொலைக்காட்சி இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

Also Read: திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் கையெழுத்திட மாட்டோம் என்றாரா ஈபிஎஸ்?

Conclusion

அண்ணாமலை ஒரு மனநோயாளி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK
Phone conversation with Vinoth kumar, Thanthi TV

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular