Claim: இரண்டு இறக்கைகளுடன் அதிசயக் குழந்தை பிறந்ததாக வைரலாகும் வீடியோ.
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சிகள் ரிக்கி என்ற பிரெஞ்சு திரைப்படத்தின் காட்சிகளாகும்.
“இரண்டு இறக்கைகளுடன் பிறந்து பறவை போல குழந்தை பறப்பது உலகிலேயே இதுதான் முதல் நிகழ்வு என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்றாரா சி.வி.சண்முகம்?
Fact Check/Verification
இரண்டு இறக்கைகளுடன் அதிசயக் குழந்தை பிறந்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் அவ்வீடியோவானது 2009-யில் வெளிவந்த ரிக்கி என்ற பிரெஞ்சு திரைப்படத்தின் வீடியோ என அறிய முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் Mystery Recapped எனும் யூடியூப் பக்கத்தில் இத்திரைப்படத்தின் கதை குறித்து விவரித்திருப்பதை காண முடிந்தது.
இதுத்தவிர்த்து வேறு சில யூடியூப் பக்கங்களிலும் இப்படம் குறித்து விவரித்திருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் திறக்கப்பட்டதா?
Conclusion
இரண்டு இறக்கைகளுடன் அதிசயக் குழந்தை பிறந்ததாக வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சிகள் ரிக்கி என்ற பிரெஞ்சு திரைப்படத்தின் காட்சிகளாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
IMDB
Youtube Video from Mystery Recapped
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)