Claim: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவன் ஆந்திராவில் கைது செய்யப்பட்டான்.
Fact: இத்தகவல் தவறானதாகும். ஆந்திராவில் கைது செய்யப்பட்டவனுக்கும் பெங்களூர் குண்டுவெடிப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
“பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான PFI ஆர்வலர் சலீம், ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் NIA யால் கைது செய்யப்பட்டார்” என்று குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

