ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகுஜராத்தில் பெண் ஒருவர் பாஜகவினரால் தாக்கப்படுவதாக பரவும் பங்களாதேஷ் வீடியோ!

குஜராத்தில் பெண் ஒருவர் பாஜகவினரால் தாக்கப்படுவதாக பரவும் பங்களாதேஷ் வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இது தான் ராமராஜ்ஜிய குஜராத் மாடல்
Fact: வைரலாகும் வீடியோ பங்களாதேஷில் நடைபெற்ற நிகழ்வாகும்.

குஜராத்தில் பெண் ஒருவர் பாஜகவினரால் தாக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“இது தான் ராமராஜ்ஜிய குஜராத் மாடல்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @Union_Eli

X Link/Archived Link

Screenshot from X @AcuranTivi

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து வீடியோ வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?

Fact Check/Verification

குஜராத்தில் பெண் ஒருவர் பாஜகவினரால் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது. இந்த வீடியோ நிகழ்வு குறித்து ABP News வெளியிட்டிருந்த செய்தியின்படி வைரல் வீடியோவில் இருப்பவர் வங்கதேச நடிகையான மிஷ்தி சுபாஸ் என்பதை நாம் அறிந்துகொண்டோம்.

முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மிஷ்தி மக்கள் கூடியுள்ள சந்தை ஒன்றில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தின் மூலமாக அவருடைய 15 வருட அடக்குமுறை ஆட்சி முடிவுக்கு வந்து தற்போது முகமது யூனுஸ் தலைமையில் ஒரு இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மிஷ்தி ஷேக் ஹசீனாவின் பிறந்தநாளை வங்கதேச மக்களுக்கு நடுவில் கொண்டாடிய நிலையில் அவர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் அவரை தாக்க முற்பட்டனர். குறிப்பிட்ட வீடியோவே தற்போது குஜராத்தில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாகப் பரவி வருகிறது.

Also Read: கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பினாரா?

Conclusion

குஜராத்தில் பெண் ஒருவர் பாஜகவினரால் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ பங்களாதேஷைச் சேர்ந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Report From, ABP News, Dated October 01, 2024
YouTube Video From, Protidiner Bangladesh, Dated September 29, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular