Fact Check
கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதிக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதா?
கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

மார்ச் 22 அன்று பாஜக, தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு நிதின் கட்கரி தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை 2021 வெளியிடப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, வி,கே.சிங் ஆகியோர் மூலமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக கட்சி.
இந்நிலையில், கோவில்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும்; கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவது தடை செய்யப்படும் என்பதாகப் பாஜக வாக்குறுதி ஒன்றினை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
Archived Link: https://archive.ph/RnTNW
Archived Link: https://archive.ph/wip/Scec7
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
கோவில்களில் ஆடு, மாடு பலியிடுவது தடை செய்யப்படும் என்பதாகப் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தை ஆராய்ந்தோம்.
அதில், பாஜகவின் தேர்தல் அறிக்கையின் முழு நகலும் இணைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து இதுபோன்ற எந்த வாக்குறுதியையும் பாஜக அளிக்கவில்லை என்பது நமக்கு தெளிவாகத் தெரிந்தது.
மேலும், பாஜகவைச் சேர்ந்த தமிழக பிரமுகர்கள் சிலரும் இது குறித்து பரவும் புகைப்படங்கள் போலியானவை என்பதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

Archived Link: https://archive.ph/kzRIL
பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகியான சி.டி.ஆர்.நிர்மல் குமார் இது தவறான தகவல் என்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

Archived Link: https://archive.ph/ooN9A
ஏற்கனவே, தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றம் செய்யப்படும் என்பதாகப் பாஜக கூறியதாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பதை நாம் எடுத்துக்கூறியுள்ளோம்.
Conclusion:
கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்ததாகப் பரவும் புகைப்படங்கள் போலியானவை; எடிட் செய்யப்பட்டவை என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources:
BJP Tamil Nadu:https://twitter.com/BJP4TamilNadu/status/1373981685486817280?s=20
Twitter:https://twitter.com/CTR_Nirmalkumar/status/1374232084386959364
Twitter: https://twitter.com/SuryahSG/status/1374050511003914243
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)