Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தம்.
Fact: வைரலாகும் செய்தி 2020 ஆம் ஆண்டின் பழைய செய்தியாகும்.
புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வியைக் கொண்டாடும் தமிழிசை என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக நியூஸ்கார்டு ஒன்று பரவியதை தொடர்ந்து, ரிவர்ஸ் சர்ச் மூறைய பயன்படுத்தி அந்த நியூஸ்கார்டு குறித்து தேடினோம்.
இத்தேடலில் ’Rajapalayam Public Group’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் இந்த நியூஸ்கார்டு 2020 நவம்பர் 23 அன்று பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்பக்கத்தில் பகிரப்பட்டிருந்த நியூஸ்கார்டிலும் நவம்பர் 23, 2020 என்று தேதியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டில் சத்தியம் டிவியின் டெம்ப்ளேட் பயன்படுத்தப்பட்டிருந்ததால், அந்த ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து தேடினோம். அத்தேடலில் நவம்பர் 23, 2020 அன்று வைரலாகும் நியூஸ்கார்டு அப்பகத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்ததது.
இதன்படி பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு 2020 ஆம் ஆண்டின் பழைய நியூஸ்கார்டு என உறுதியானது. சத்தியம் டிவியின் சமூக ஊடகப் பக்கங்களில் இந்த நியூஸ்கார்டு பழைய நியூஸ்கார்டு என்று உறுதி செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் தமிழ்நாடு தகவல் சரிப்பார்ப்பகம் வைரலாகும் செய்தி பழைய செய்தி என்று அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதையும், அப்பதிவை தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை மறுபதிவு செய்திருப்பதையும் காண முடிந்தது.
Also Read: விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று அறிக்கை வெளியிட்டாரா ரஜினி?
7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக பரவும் செய்தி பழைய செய்தியாகும். 2020 ஆம் ஆண்டின் நியூஸ்கார்டை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது. இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook post from Rajapalayam Public Group, Dated November 23, 2020
X post from Sathiyam Tv, Dated November 23, 2020
X post from Sathiyam Tv, Dated November 25, 2024
X post from TN Fact Check, Dated November 25, 2024
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Ramkumar Kaliamurthy
December 2, 2024
Vijayalakshmi Balasubramaniyan
November 29, 2024
Ramkumar Kaliamurthy
October 17, 2024