Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: சென்னை நொச்சிகுப்பம் மீன் கடைகள் திமுக ஆட்சியால் இடிக்கப்பட்டது – புகைப்படம்
Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
நொச்சிக்குப்பம் மீன் விற்பனைக் கடைகள் இடிக்கப்பட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டபோது அதனை எதிர்த்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவுசெய்த பொதுநல வழக்கினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொது சாலைகளின் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் முறையற்ற ஆக்கிரமிப்புகள் என்ற அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்த செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள். மேலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்புகள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படுவதாக சமீபத்தில் நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில், “சென்னை நொச்சிகுப்பம் மீன் கடைகள் திமுக ஆட்சியால் இடிக்கப்பட்டது” என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: உத்திரப்பிரதேசத்தில் காவல் துறையினர் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?
நொச்சிக்குப்பம் மீன் விற்பனைக் கடைகள் இடிக்கப்பட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் முறைக்கு உள்ளாக்கியபோது Times Of India கடந்த ஜனவரி 29, 2019ஆம் ஆண்டு Marina Loop Road a dumping yard for debris என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்த செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
“Marina Loop Road littered with debris with the local fishing community and the city corporation passing the buck to each other” என்று இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
Also Read: Fact Check: கர்நாடகாவில் ஓட்டுக்கு பணம் தந்ததா பாஜக?
நொச்சிக்குப்பம் மீன் விற்பனைக் கடைகள் இடிக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
News Article From, Times Of India, Dated January 29, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)