Fact Check
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதாக பரவும் தவறான வீடியோ!
Claim: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதாக பரவும் வீடியோ.
Fact: வைரலாகும் வீடியோ தவறானதாகும். அவ்வீடியோ ஒரு வருடத்திற்கு முன்பு காஞ்சிபுரம் சந்திரசேகர சுவாமி மணிமண்டபத்தில் எடுக்கப்பட்டதாகும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதாகவும், அதை விசிக நிர்வாகி ஒருவர் தட்டிக்கேட்டதாகவும் தந்தி தொலைக்காட்சியில் செய்தி ஒன்று வெளிவந்திருந்தை காண முடிந்தது.
இதைத்தொடர்ந்து தீட்சிதர்கள் விசிக நிர்வாகியை தாக்கியதாக அவர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக மாநாடு பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு மது அருந்திவிட்டு வந்தாரா புஸ்ஸி ஆனந்த்?
Fact Check/Verification
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ என்று பரவும் வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் ABP நாடு ஊடகத்தில் ஜூன் 06, 2023 அன்று “Watch Video: காஞ்சிபுரம் கோயிலுக்குள் கிரிக்கெட்… சிக்ஸரை பறக்கவிட்ட வெங்கடேஷ் ஐயர்.. வைரலாகும் வீடியோ!” என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் காஞ்சிபுரத்திலிருக்கும் சந்திரசேகரேந்திர சுவாமி மணிமண்டபத்திற்கு வருகை புரிந்ததாகவும், அப்போது அங்கு பாட சாலையில் படிக்கும் மாணவர்கள் அவரை கிரிக்கெட் விளையாட அழைத்ததாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொண்டு அவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதாகவும் இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் வைக்கல் கிரியேஷன் எனும் யூடியூப் பக்கத்தில் காஞ்சிபுரத்திலிருக்கும் சந்திரசேகரேந்திர சுவாமி மணிமண்டபத்தின் வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவின் காட்சிகளையும் வைரலாகும் வீடியோவின் காட்சிகளையும் ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் வீடியோ காஞ்சிபுரத்திலிருக்கும் சந்திரசேகரேந்திர சுவாமி மணிமண்டப வளாகத்தில் எடுக்கப்பட்டது என உறுதி செய்ய முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் வெங்கடேஷ் ஐயர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் வீடியோவை ஜூன் 05, 2023 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. அப்பதிவில் இவ்வீடியோ காஞ்சிபுரத்தில் எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்திருந்ததை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் சிதம்பரத்தில் நடந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என உறுதியாகின்றது.
Also Read: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு… வைரலாகும் படத்தின் உண்மை பின்னணி!
Conclusion
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ என்று பரவும் வீடியோ தவறானதாகும். அவ்வீடியோ சென்ற வருடம் ஜூன் மாதத்தில் காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சுவாமி மணிமண்டப வளாகத்தில் எடுக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Report from ABP Nadu, Dated June 06, 2023
Report from India Today, Dated June 08, 2023
Instagram post from Venkatesh Iyer, Cricketer, Dated June 05, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)