தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நடிகர் விஜய் சந்தித்து பேசியது குறித்து முதல்வர், “படிக்காதவன் படத்தில் விவேக் காலில் விழுந்து கெஞ்சியது போல் விஜயும் என் காலில் விழுந்து இன்று கெஞ்சினார்” என்று ட்விட் போட்டதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Fact Check/ Verification:
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
ஆனால், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் திரையரங்குகளில் 50 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் இன்று மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் அதற்காக 100 சதவீத இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, அச்சந்திப்பு குறித்த வைரல் பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் கொடிகட்டிப் பறக்கத் துவங்கின.
அதில் ஒன்றாக, “படிக்காதவன் படத்தில் விவேக் காலில் விழுந்து கெஞ்சியது போல் விஜயும் என் காலில் விழுந்து இன்று கெஞ்சினார்” என்று இச்சந்திப்பு குறித்து தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறாகப் பதிவிட்டதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
https://twitter.com/Santabilla/status/1343467497375186945?s=20

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
நடிகர் விஜய் தன்னை சந்தித்தது குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட் போட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் இப்புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து தீவிரமாக ஆய்வு செய்தோம்.
குறிப்பிட்ட அந்த புகைப்படத்தை ஆராய்ந்தபோது, அதில் நேரம் 12.05 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த நேரத்தில் முதல்வரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எவ்வித பதிவும் இடப்படவில்லை.
சரியாக 12.06 மணியளவில் மயிலாடுதுறை மாவட்டம் துவக்கி வைக்கப்பட்ட விழா குறித்த பதிவு மட்டுமே இடப்பட்டுள்ளது.
மேலும், அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்கள் இரண்டிலுமே நடிகர் விஜயுடனான சந்திப்பு குறித்து எந்தவித பதிவும் மேற்கொள்ளப்படவில்லை.
Conclusion:
எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், நடிகர் விஜய் தன்னை சந்தித்து உரையாடியது குறித்து கிண்டலாக ட்விட் போட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையில்லை; போலியாகச் சித்தரிக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரத்துடன் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் நிரூபித்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
CMO TamilNadu: https://twitter.com/CMOTamilNadu/status/1343445689569665024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)