Friday, March 14, 2025
தமிழ்

Fact Check

காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சியில் இணையும் பெண்ணிற்கு முத்தமிடுவதாகப் பரவும் வீடியோ உண்மையா?

banner_image

Claim: காங்கிரஸ் மூத்த தலைவர் அந்த பெண்ணை முழு மரியாதையுடன் காங்கிரஸ் உறுப்பினராக வரவேற்கிறார்

Fact: வைரல் வீடியோவில் இருப்பவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் அவர் மனைவி ஆவர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கட்சியில் இணையும் பெண்ணிற்கு ப்ளையிங் கிஸ் கொடுத்து வரவேற்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“காங்கிரஸ் மூத்த தலைவர் அந்த பெண்ணை முழு மரியாதையுடன் காங்கிரஸ் உறுப்பினராக வரவேற்கிறார்” என்று குறிப்பிட்ட வீடியோவில் இருக்கும் நபரை தவறாக சித்தரிக்கும் வகையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர்
Screenshot from X @Vinothkumar2214

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குஜராத்தின் இரண்டு வழிச்சாலை என பரவும் பல்கேரியா நாட்டின் சாலை!

Fact Check/Verification

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கட்சியில் இணையும் பெண்ணிற்கு ப்ளையிங் கிஸ் கொடுத்து வரவேற்பதாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது கடந்த 2022ஆம் ஆண்டு நியூஸ் 18 ஒடியா வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றிற்கு எடுத்துச் சென்றது.

அதன்படி, வைரலாகும் வீடியோவில் இருப்பவர்கள் ஒடிசா Jeypore எம்எல்ஏவான தாரா பிரசாத் என்பதையும், அவருடன் இருக்கும் பெண்மணி அவரது மனைவி மீனாகி என்பதையும் நம்மால் அறிய முடிந்தது.

இதுகுறித்து, Latestly தளத்தில் கடந்த ஜனவரி மாதம் கட்டுரை வெளியாகியுள்ளது. ”Congress MLA Tara Prasad Bahinipati was caught on camera blowing flying kisses at his wife Minakhi Bahinipati at a public event” என்று இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தாரா பிரசாத் தனது மனைவியின் மீது பொதுவெளியில் இவ்வாறு அன்பை வெளிப்படுத்துவது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.

Also Read: நோட்டாவை விட பாஜக விரைவில் தமிழகத்தில் அதிக ஓட்டு வாங்கும் என்று கூறினாரா பிரசாந்த் கிஷோர்?

Conclusion

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கட்சியில் இணையும் பெண்ணிற்கு ப்ளையிங் கிஸ் கொடுத்து வரவேற்பதாக பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, News 18 Odia, Dated December 29, 2022
News Report From, Latestly, Dated January 09, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
No related articles found
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,430

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.