Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: குலசை கடற்கரையில் புயல் உருவாகிய காட்சி
Fact: வைரலாகும் வீடியோ சைப்ரஸ் நாட்டில் எடுக்கப்பட்டதாகும்.
தூத்துக்குடி குலசை கடற்கரையில் புயல் என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
”குலசை கடற்கரையில் புயல் உருவாகிய காட்சி” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவு உண்பதில்லையா?
தூத்துக்குடி குலசை கடற்கரையில் புயல் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ‘The Weather Channel’ என்கிற இணையப்பக்கத்தில் இந்த முழு வீடியோவும் கடந்த கடந்த நவம்பர் 08, 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின்படி, கடந்த அக்டோபர் 17, 2022ஆம் அன்று சைப்ரஸ் நாட்டில் அமைந்துள்ள அய்யா நாபா (ayia Napa) என்கிற கடற்கரை பகுதியில் ‘Tornadic Waterspout’ ஏற்பட்டபோது படமாக்கப்பட்ட வீடியோ இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

FoxWeather பக்கத்திலும் இந்த வீடியோ குறித்த செய்தி கடந்த அக்டோபர் 18, 2022 அன்று “A massive waterspout swirled onto Ayia Napa Beach in Cyprus on Oct. 17. Local police say no major damage was done” என்று வெளியாகியுள்ளது. இச்செய்திமூலம், மக்களுக்கோ உடைமைகளுக்கோ பெரிய பாதிப்பில்லை என்பதும் தெளிவாகிறது.

குறிப்பிட்ட வீடியோ காட்சியே தற்போது குலசை கடற்கரையில் புயல் என்று பரவுகிறது.
Also Read: இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினரா?
தூத்துக்குடி குலசை கடற்கரையில் புயல் என்று பரவும் வீடியோ தகவல் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Instagram Video from, FoxWeather, Dated October 18, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)