வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact Checkசென்னையின் பிரபலமான தேவி தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுகிறதா?

சென்னையின் பிரபலமான தேவி தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுகிறதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

சென்னையின் பிரபல பழமை சிறப்பு வாய்ந்த தியேட்டர்களில் ஒன்றான தேவி சினிப்ளக்ஸ் மூடப்படுவதாக தகவல் ஒன்று முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டிருந்தது. அதனை சமூக வலைத்தளத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

சென்னையின்
Source: Facebook

சென்னையின் சிறப்பாக 1970ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்ற திரையரங்கம் தேவி. இதில், தேவி, தேவி பாரடைஸ், தேவிபாலா, தேவிகலா என்று நான்கு திரைப்பட அரங்குகள் உள்ளன. தேவி தியேட்டர் தனது பொன்விழா ஆண்டினை கடந்த 2020ம் ஆண்டு கொண்டாடியது.

இந்நிலையில், தேவி தியேட்டர் வளாகம் நிரந்தரமாக மூடப்படுவதாக செய்தி ஒன்று பிரபல நாளிதழில் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து இக்குறிப்பிட்ட செய்தியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சென்னையின்
Source: Facebook

Facebook Link

Source: Facebook

Facebook Link

சென்னையின்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

சென்னையின் பிரபலமான தேவி தியேட்டர் வளாகம் விரைவில் மூடப்பட உள்ளதாக பரவிய செய்தி குறித்த உண்மைத்தன்மை பற்றி ஆராய்ந்தோம்.

முதலில், குறிப்பிட்ட அச்செய்தியை வெளியிட்டிருந்தது தமிழின் பிரபல நாளிதழ் ஒன்று என்பது நமக்குத் தெரிய வந்தது.

தொடர்ந்து, இதுகுறித்து தேவி தியேட்டரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் சென்று ஆராய்ந்தபோது, தேவி சினிப்ளெக்ஸ் சார்பில் குறிப்பிட்ட அச்செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Source: Facebook

Facebook Link/Archived Link

சென்னையின்
Source: Facebook

Facebook Link/Archived Link

அதில், “கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஒரு வருடமாக மருத்துவ துறையின் வழிகாட்டுதல் அடிப்படையில் தியேட்டர் வளாகத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தி வருகிறோம். மேலும், அதற்கு உண்டான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

ஆனால், சுத்தம் செய்வதை இழுத்து மூடுவதாக தவறான செய்தி பரவி இருக்கிறது.

தேவி தியேட்டரை நிரந்தரமாக மூடப்போவதாக, திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் சொன்னதாகவும், செய்தி வெளிவந்திருக்கிறது.

அந்த செய்தி தவறானது. செய்தி வெளியிட்ட நாளிதழ் தக்க மறுப்பு செய்தி வெளியிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேவி தியேட்டர் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுகிறதே தவிர, முழுவதுமாக மூடப்படுவதாகப் பரவிய தகவல் தவறானது என்பதை நாம் தெரிந்து கொண்டோம்.

Conclusion:

சென்னையின் பிரபலமான தேவி தியேட்டர் வளாகம் விரைவில் மூடப்பட உள்ளதாக பரவிய செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading/Partly False

Our Sources:

Facebook: https://www.facebook.com/DEVI-Cineplex-1059492687404972

Devi Cineplex: http://www.devicinemas.in/

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Our Sources

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular