ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkசாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்கியதா ஈரான்?

சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்கியதா ஈரான்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

சீனாவின் தலையீடால் சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதுக்குறித்து காங்கிரஸ் கட்சி உட்பட பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சாபஹார் துறைமுகம்.
சாபஹார் துறைமுகம்.

Fact Check/Verification

இச்செய்திக் குறித்து இந்துத் தமிழ், தினகரன், ஒன் இந்தியா உட்பட பல இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

சாபஹார் இரயில் திட்டம் குறித்து இந்துத் தமிழ்
இந்துத் தமிழில் வந்தச் செய்தி

சாபஹார் இரயில் திட்டம் குறித்து தினகரன்
தினகரனில் வந்தச் செய்தி.

சாபஹார் இரயில் திட்டம் குறித்து ஒன் இந்தியா தமிழ்.
ஒன் இந்தியாவில் வந்தச் செய்தி.

பத்திரிக்கைகளில் வந்தச் செய்தி

கடந்த மே, 2016-ல் பிரதமர் மோடி டெஹ்ரான் சென்ற போது சாபஹார் ரயில் திட்டத்துக்காக ஆப்கான், இந்தியா, ஈரான் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில், சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கான் எல்லையினூடாக சஹேதான் வரை ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவுடன் ஈரான் மேற்கொண்டது.

ஆனால் தற்போது திட்டத்தைத் தொடங்க இந்தியத் தரப்பிலிருந்து நிதி அளிப்பதில் தாமதமாகி வருவதால் தாங்களே இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்கிறோம் என்று ஈரான் இந்தியாவை இத்திட்டத்திலிருந்து நீக்கி உள்ளது.

ஆனால் சீனா, ஈரானுடன் 25 ஆண்டுகாலத்திற்கு 400 பில்லியன் டாலர் ராணுவ-பொருளாதார கூட்டுறவு மேற்கொள்வதை இறுதி செய்துள்ளது. இதன் காரணமாகவே ஈரான் இவ்வாறு நடந்துக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

உண்மை என்ன?

இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் இதை ஆராய முனைந்தோம்.

நாம் இதுக்குறித்து கூகுளில் ஆராய்ந்தபோது, நமக்கு இதன் உண்மைகள் தெரிய வந்தது.

நம் இந்திய ஊடகங்கள் கூறிய இச்செய்தியினை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளது. சாபஹார் ரயில் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் ஈரான் இரண்டு ஒப்பந்தங்களே செய்தது. அதில் ஒன்று, சாபஹார் துறைமுகத்தின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்புடையது என்றும் மற்றொன்று, அந்த துறைமுகத்தில் இந்தியாவின் முதலீடான 150 மில்லியன் டாலர் பற்றியது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து ஒன் இந்தியா செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

ஒன் இந்தியாவில் வந்தச் செய்தி.

Conclusion

நம் விரிவான விசாரணைக்குப்பின் சாபஹார் ரயில் திட்டம் குறித்து வெளிவந்த செய்தியானது முற்றிலும் பொயானது என்று நமக்குத் தெளிவாகிறது.

Result: False


Our Sources

Twitter Profile: https://twitter.com/AshaGKumar1/status/1285404764130275328

Hindu Tamil: https://www.hindutamil.in/news/india/564410-iran-drops-india-from-chabahar-rail-project-cites-funding-delay-big-loss-for-india-says-congress-1.html

Dinakaran: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=601031

One India: https://tamil.oneindia.com/news/international/iran-drops-india-from-chabahar-port-train-project-after-deal-with-china-391251.html

https://www.youtube.com/watch?v=i-hc0oy_FLE


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular