ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஜோ பைடன் கறுப்பின சிறுமியிடம் மன்னிப்புக் கேட்டாரா?

ஜோ பைடன் கறுப்பின சிறுமியிடம் மன்னிப்புக் கேட்டாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அமெரிக்க காவல்துறையினரால் கொலையுண்ட ஜார்ஜ் பிளாய்டின் மகளிடம் மன்னிப்புக் கேட்டதாகப் புகைப்படம்  ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜோ பைடன் குறித்து வைரலானப் பதிவு

Fact Check/Verification

கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் மினேபொலிஸ் நகரில் காவலதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் பிளாய்ட் எனும் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தார்.

விசாரணையின்போது  அந்த அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட்டை கீழேத் தள்ளி, அவரின் கழுத்தைத் தன் காலால் நெறித்தார். வலி பொறுக்க முடியாதா ஜார்ஜ் பிளாய்ட், “என்னால் மூச்சு விட முடியவில்லை, என்னை கொன்று விடாதீர்கள்” என்று கெஞ்சினார்.

ஆனால் இதை சற்றும் காதில் வாங்காமல் அந்த அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தை தொடர்ந்து அழுத்த, ஜாய்ஜ் பிளாய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுத் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும்  பரப்பரப்பை உருவாக்கியது. இதனால் அமெரிக்காவில் அப்போது பெரும் கலவரம் ஏற்பட்டது.

தற்போது இச்சம்பவத்தில் உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் மகளிடம், அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் இச்சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜோ பைடன் குறித்து வைரலானப் பதிவு _1
ஜோ பைடன் குறித்து வைரலானப் பதிவு_2

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

ஜோ பைடன் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, வைரலாகும் அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.

 இவ்வாறு செய்ததன் மூலம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இத்தகவல் முற்றிலும் தவறானது எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.

நமது ஆய்வில், Detroit Free Press எனும் இணையத் தளத்தில் “Joe Biden stops by Detroit’s Three Thirteen store, says he’s shopping for his grandkids“ எனும் தலைப்பில் செய்தி ஒன்று வெளிவந்திருந்ததைக் காண முடிந்தது.

இச்செய்தியில், ஜோ பைடன் அவர்கள் அமெரிக்க அதிபர் பதவிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அமரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் இருந்த Three Thirteen store எனும் அங்காடியில் அவரது பேரப்பிள்ளைகளுக்காக பொருட்கள் வாங்கியதாகவும், அப்போது அந்த அங்காடியின் முதலாளியின் மகனான C.J.பிரௌனி எனும் சிறுவன் அவருக்கு உதவியதாகவும் தகவல் இருந்தது.

ஜோ பைடன் குறித்து வந்தச் செய்தி
Source: Detroit Free Press/ Screen shot

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் செய்தியில், புகைப்படத்தில் காணப்படும் குழந்தை ஜான் பிளாய்ட்டின் குழந்தை என்றும், மேலும் அது பெண் குழந்தை என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் மேற்கண்ட செய்தியின் அடிப்படையில் பார்த்தால் இந்த இரண்டுக் கூற்றுமே தவறானது என்பது நமக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

இதன்மூலம் அமெரிக்க அதிபர் ஜோன் பைடன் அவர்கள் ஜான் பிளாய்டின் மகளிடம் மன்னிப்புக் கேட்டதாகப் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு உறுதியாகிறது.

Conclusion

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க காவலதிகாரி ஒருவரால் கொலையுண்ட கறுப்பினவரான ஜான் பிளாய்ட் அவர்களின் மகளிடம் மன்னிப்புக் கேட்டதாகப் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தகுந்த ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

Result: Misleading

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/Ruthramfm/posts/3496195313807252

Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=2761241774191702&id=100009177206016

Detroit Free Press: https://www.freep.com/story/news/local/michigan/detroit/2020/09/09/joe-biden-stops-detroits-three-thirteen-clothing-store/5766667002/

Facebook Profile: https://www.facebook.com/arunan.meenachchisundaram/posts/10221468626978244


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular