Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
2019 ஆம் ஆண்டு, அழகர் கோயில் திருவிழாவிற்காக மக்களவைத் தேர்தல் தேதியைத் தள்ளி வைக்கக் கூடாது என்று சு.வெங்கடேசன் அவர்கள் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.
Archive Link: https://archive.vn/vFFua
மதுரை மக்களவை உறுப்பினரான சு. வெங்கடேசன் அவர்கள் மத்திய கல்வி அமைச்சரான ஸ்ரீ ரமேஷ் பொக்ரியால் நிஷங் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இக்கடிதத்தில்,
“ ரம்ஸான் இஸ்லாமிய மக்களுக்கு முக்கியமான பண்டிகையாகும். தமிழக அரசும், மத்திய அரசும் மே 14, 2021 ஆம் தேதியை ரமலான் பண்டிகை தேதி என்று அறிவித்து விடுமுறை அறிவித்துள்ளது.
ஆனால் ரமலான் பண்டிகை தேதி என்பது பிறை தெரிவதின் அடிப்படையில் நிர்ணயிக்கக் கூடியது. இதன்படி பார்த்தால் ரமலான் பண்டிகை தேதியானது மே 14க்கு முன்போ, அல்லது பின்போ மாற வாய்ப்பு உள்ளது.
இந்த வாய்ப்பு குறித்து யோசிக்காமல் சிபிஎஸ்இ (CBSE) மே 13 மற்றும் மே 15 தேதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பினருக்கு தேர்வினை அறிவித்துள்ளது.
ஒரு வேளை ரமலான் தேதி மாறினால் இஸ்லாமிய மதத்தை சார்ந்த மாணவர்களுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
இவ்வாறு ஒரு நெருக்கடியை இஸ்லாமிய மாணவர்களுக்கு ஏற்படுத்தி, அவர்களுக்கு முக்கியமான பண்டிகை தினத்தில் அவர்களை தேர்வு எழுதச் சொல்லி கட்டாயப்படுத்துவது சரியல்ல.
ஆகவே இவ்வாறு ஒரு நெருக்கடியைத் தவிர்க்க அத்தேதிகளில் இருக்கும் தேர்வை தள்ளி வைக்குமாற் சிபிஎஸ்இ(CBSE)-யைக் கேட்டுக்கொள்கிறேன்.”
என்று சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
இதுக்குறித்த பதிவு ஒன்றையும் தன் டிவிட்டர் பக்கத்தில் சு.வெங்கடேசன் பகிர்ந்துள்ளார்.
இத்தகவலானது புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருந்தது.
இச்செய்தையைக் கண்ட சிலர், அழகர் கோயில் திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்றக் கூடாது எனக் கூறிய இவர், இப்போதுஇவ்வாறு பேசுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
Archive Link: https://archive.vn/9iNUw
Archive Link: https://archive.vn/2rnHE
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மதுரை சித்திரைத் திருவிழா என்பது மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு முக்கியமான திருவிழாவாகும்.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைப்பெற்ற நாளில் மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டமும், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைப்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆகையால் அந்நாளில் நடைபெறவிருந்த தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனா இவ்வழக்குகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதுக்குறித்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஆனால் அச்சமயம் கோயில் திருவிழாவுக்காக தேர்தலை வைக்கக் கூடாது என்று சு.வெங்கடேசன் கூறியதாக தகவல் ஒன்று தற்சமயம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து தேடினோம். அவ்வாறு தேடியதில் இந்த தகவலானது 2019 ஆம் ஆண்டே பரவியுள்ளதென்பதையும், அதற்கு சிபிஐஎம் தமிழ்நாடு (CPIM Tamilnadu) தனது அதிகாரப் பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்ததையும் காண முடிந்தது.
மேலும் இந்த தகவல் குறித்து அக்கட்சி சார்பில் தொகுதி அலுவலரிடம் புகாரும் அளிக்கப்பட்டது. இதுக்குறித்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலே நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் பார்க்கும்போது அழகர் கோயில் திருவிழாவிற்காக மக்களவைத் தேர்தல் தேதியை தள்ளி வைக்கக் கூடாது என்று சு.வெங்கடேசன் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பது தெளிவாகிறது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Twitter Profile: https://twitter.com/netrikantv/status/1359077592251305985
Twitter Profile: https://twitter.com/jkmultiplus/status/1359146855632830466
CPIM Tamilnadu: https://www.facebook.com/TNCPIM/posts/1179826498839352
Dinamalar: https://www.dinamalar.com/news_detail.asp?id=2239475
Hindu Tamil: https://www.hindutamil.in/news/tamilnadu/158330-.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)