Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையிலிருந்து தமிழ் நீக்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றது.

சென்னையின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் என்று இருந்த இதன் பெயர் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று கடந்த வருடம் மோடி அவர்களால் மாற்றப்பட்டது.
தற்போது சென்னை சென்ட்ரலின் பெயர்ப்பலகையில் தமிழ் நீக்கப்பட்டதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதன் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.
வைரலாகும் விஷயம் குறித்து நம் விசாரிக்கையில், அது பொய்யான விஷயம் என்று நமக்கு உறுதியானது.
உண்மையில், புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தின் பெயர்ப்்பலகை முதலில் தமிழிலும், அடுத்து இந்தியிலும், கடைசியாக ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.
சென்னை ரயில் நிலையக் கட்டிடத்தின் பாதிப் பகுதியை மட்டும் படம் எடுத்து இவ்வாறுத் தவறான செய்திப் பரப்பப்படுகிறது என்று நம் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுக்குறித்து தென்னக இரயில்வேயும் தனது மறுப்பைத் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து ஊடகங்களிலும் செய்தி வெளிவந்திருந்தது.
நம் விரிவான ஆய்வுக்குப்பின் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையிலிருந்து தமிழ் முற்றிலும் நீக்கப்பட்டதாக பரப்பப்பட்ட செய்தி தவறானது என்று உறுதியாகியுள்ளது. இரயில் நிலையக் கட்டிடத்தின் ஒரு பகுதியை மட்டும் படம் பிடித்து இவ்வாறு தவறானச் செய்தி பரப்பப்பட்டுள்ளது என்றும் தெளிவாகியுள்ளது.
Facebook Profile: https://www.facebook.com/photo?fbid=156388679407958&set=a.107754890938004
Twitter Profile: https://twitter.com/idonashok/status/1295235225966927882/photo/1
Twitter Profile: https://twitter.com/DravidanTalkies/status/1295236467443212288
Southern Railway Twitter Profile: https://twitter.com/GMSRailway/status/1295316189862715393
Win News Twitter Profile:
Puthiya Thalaimurai Twitter Profile: https://twitter.com/PTTVOnlineNews/status/1295306944203300864
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 14, 2024
Vijayalakshmi Balasubramaniyan
April 24, 2024
Vijayalakshmi Balasubramaniyan
December 1, 2023