வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkபாஜக பிரமுகர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்துமீறினாரா?

பாஜக பிரமுகர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்துமீறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பிரபல இந்தித் தொலைக்காட்சியான ஜீ தொலைக்காட்சி நடத்தும் நடன நிகழ்ச்சியான டான்ஸ் இந்தியா நிகழ்ச்சியில் நொய்டாவைச் சார்ந்த பாஜக பிரமுகரும் அவரின் மகனும்  நடுவர்களை மிரட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில்  வைரலாகி வருகிறது.

பாஜக பிரமுகர் மிரட்டியதாக வலம் வரும் வீடியோ.
வைரலான பதிவு.

 Fact Check/Verification

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஜீ தொலைக்காட்சி நிறுவனமும் ஒன்றாகும். இந்நிறுவனம் டான்ஸ் இந்தியா டான்ஸ் எனும் நடன நிகழ்ச்சியைக் கடந்த 2009 ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது.

இந்த டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வு ஒன்று தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியின் தேர்வு சுற்றில் பங்குக்கொள்ளும் இளைஞர் ஒருவர், தான் நொய்டாவைச் சார்ந்த தொழிலதிபரின் மகன் என்றும் நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்குத் தேவையானதைக் கூறுகிறேன் என்றும் கூறுகிறார்.  

அதற்கு நடுவர்கள் மறுக்க, இதற்குப் பின் நடக்கவிருக்கும் பின்விளைவுகளுக்கு நான் பொருப்பல்ல என்று அந்த இளைஞர் மிரட்டுகிறார். அதன்பின் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.

இதன்பின்  சிறிது நேரம் கழித்து அந்த இளைஞர் தன் தந்தை மற்றும் அவரின் அடியாட்களுடன் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இவ்வாறு அவ்வீடியோ உள்ளது.

வைரலாகும் வீடியோவைக் கீழேக் காணலாம்:

https://www.facebook.com/suriyan.rjk/videos/126055422555664
வைரலாகும் வீடியோ.

இதில் நடுவர்களை மிரட்டும் அந்த நபர் ஒரு பாஜக தலைவர் என்றும் அதிகாரத் திமிரால் இவர்கள் இவ்வாறு நடந்துக் கொள்கிறார்கள் என்றும் கூறி பலரும் இவ்வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

இதுபோல் பலரும் இவ்விஷயத்தைப் பரப்பி வருகின்றனர். அதை இங்கே காணலாம்.

சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் இவ்வீடியோவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய,  இவ்வீடியோவை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.

உண்மை என்ன?

வைரலாகும் வீடியோவின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய இந்நிகழ்வுக் குறித்து கூகுளில் தேடினோம்.

நம் தேடலில், Tellychakkar.com எனும் இணையத்தளத்தில் இந்நிகழ்வுக் குறித்த செய்தி இடம்பெற்றிருந்ததை நம்மால் காண முடிந்தது.

பாஜக பிரமுகர் பிரச்சனைக் குறித்து Tellychakkar.com-ல் வந்தச் செய்தி.
Tellychakkar.com-ல் வந்தச் செய்தி.

இச்செய்தியில் வைரலான வீடியோவில் காணப்படும் நிகழ்வு உண்மையில்  ஒரு பொய்யான நிகழ்வு என்றும் நடுவர் புனித் அவர்களை ஏமாற்றுவதற்காக அவரின் சக நடுவரான முதஸ்ஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வைரலான வீடியோவில் தகராறுக்குப் பிறகு என்ன நடந்தது என்று காண்பிக்கப்படவில்லை. இது தெரிந்தால்தான் இது உண்மைச் சம்பவமா? அல்லது Tellychakkar.com-ல் குறிப்பிட்டதுபோல் கேலிக்காக சித்தரிக்கப்பட்ட சம்பவமா? என்று நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.

எனவே இந்நிகழ்வு குறித்து மேலும் தேடினோம்.

இந்நிகழ்வானது டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியின் சீசன் ஐந்தின் தேர்வுச் சுற்றில்  நடைப்பெற்றதாக Tellychakkar.com-ல் குறிப்பிட்டிருந்ததால், ஜீ தொலைக்காட்சி குழுமத்தின் அதிகாரப் பூர்வ இணையத்தளமான ஜீ5-யில்  இந்நிகழ்ச்சிக் குறித்துத் தேடினோம்.

நம் தேடலில்  டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியின் ஐந்தாம் சீசனின் முதலாம் பகுதியிலேயே இந்நிகழ்வு நடந்ததை நம்மால் காண முடிந்தது. அவ்வாறு கண்டதில் Tellychakker.com-ல் குறிப்பிட்டதுபோல், புனித் அவர்களை சக நடுவர்கள் ஏமாற்றுவதற்காக ஏற்படுத்திய நிகழ்வுதான் இது என்ற உண்மை எங்களுக்குத் தெளிவாகியது.

இந்நிகழ்வுக் குறித்து நாம் மேலும் தேடுகையில், BindAss Chacha எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்நிகழ்வுக் குறித்த முழுமையான வீடியோ பதிவேற்றப்பட்டதை நம்மால் காண முடிந்தது.

அவ்வீடியோ உங்களுக்காக:

https://www.facebook.com/BindAssChacha/videos/1591647141007418/
வைரலான வீடியோவின் முழுப்பகுதி.

மேற்கண்ட வீடியோவின் மூலம்  வைரலாகும் வீடியோவில் இருக்கும் நிகழ்வு வேடிக்கைக்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்வு என்பதையும்  இதில் எந்த ஒரு பாஜக தலைவருக்கும் பங்கு இல்லை என்பதையும் வாசகர்கள் அறிந்துக் கொண்டிருப்பீர்கள்.

தனியார் தொலைக்காட்சிகள் தங்களின் TRP-க்காக இதுபோன்ற செயற்கையான சம்பவங்களை நிகழ்த்துவது அடிக்கடி நடக்கும் விஷயமாகும். அதுவும் இந்தித் தொலைக்காட்சிகளில் இது சர்வ சாதாரணமான விஷயமாகும்.

Conclusion

நமது விரிவான ஆய்வுக்குப்பின் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவங்கள் அனைத்தும் விளையாட்டுக்காக செய்யப்பட்டது என்பதும் இதில் எந்த கட்சித் தலைவருக்கும் தொடர்பில்லை என்பதும் தெளிவாகிறது.

Result: Misleading


Our Sources

Facebook Profile: https://www.facebook.com/suriyan.rjk/videos/126055422555664

Facebook Profile: https://www.facebook.com/816123698743938/videos/817169909110202

Twitter Profile: https://twitter.com/Vijhaishekar/status/1306166543101771781

Facebook Profile: https://twitter.com/aimlkaja111/status/1306527460691828742

Facebook Profile: https://www.facebook.com/BindAssChacha/videos/1591647141007418/

Tellychakkar.Com: https://www.tellychakkar.com/tv/tv-news/omg-contestant-bribed-punit-pathak-dance-india-dance-200915


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular