Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா “ஜாதி வேண்டாம் போடா” என்ற வாசகம் அடங்கிய டீ-சர்ட் அணிந்தவாறு காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
“குருவி உட்கார பனம்பழம் விழுந்தது” என்ற பழமொழிக்கு ஏற்ப கடந்த வாரம் யுவன் ஷங்கர் ராஜாவும் நடிகர் ஷிரிஷும் இணைந்து எடுத்த ஒரு புகைப்படம் தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்புகைப்படம் காரணமாக “இந்தி_தெரியாது_போடா” எனும் ஹேஷ்டேக் உருவாகி, அது உலகம் முழுவதும் ட்ரெண்டானது. தமிழகத்தின் பிரபலங்கள் இதே போன்ற டீ-சர்ட்களை அணிந்து, அதைப் படம்பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றினர்.
இந்த ஹேஷ்டேக் தமிழக அரசியலில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இன்று வரை அந்தப் பிரச்சனை போய்க் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் தற்போது “ஜாதி வேண்டாம் போடா” என்ற வாசகம் அடங்கிய டீ-சர்ட்டை அணிந்தபடி யுவன் சங்கர் ராஜா தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரப்படும் இப்புகைப்படத்தின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் இதை ஆராய்ந்தோம்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அது எங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்தோம்.
யுவன் ஷங்கர் ராஜாவின் அதிகாரப் பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஆராய்ந்தபோது, வைரலாகும் இப்புகைப்படம் குறித்த உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
யுவன் சங்கர் ராஜா கடந்த செவ்வாய்க்கிழமை (8/10/2020) அன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “No pressure, No diamonds.” என்ற வாசகத்துடன் வெள்ளை டீ-சர்ட்டை அணிந்தவாறு ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படத்தை எடிட் செய்து, யுவன் சங்கர் ராஜாவின் டீ-சர்ட்டில் “ஜாதி வேண்டாம் போடா” என்ற வாசகத்தைச் சேர்த்து, அதையே தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
வாசகர்களின் புரிதலுக்காக எடிட் செய்யப்பட்ட படத்தையும், உண்மையான படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
நம் விரிவான ஆய்வுக்குப்பின் யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் “ஜாதி வேண்டாம் போடா” என்ற வாசகம் உள்ள டீ சர்ட்டை அணிந்துள்ளப்படி பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதும் அது உண்மையானது அல்ல என்பதும் தெளிவாகியுள்ளது.
Facebook Profile: https://www.facebook.com/photo?fbid=1648865821960592&set=gm.668674020408810
Twitter Profile: https://twitter.com/kaderdeen88/status/1303581383877627904
Twitter Profile: https://twitter.com/Ganesh_265/status/1303415572151951361
Yuvan Shankar Raja Facebook Profile: https://www.facebook.com/itsyuvan/photos/a.1463755850565647/2676186695989217/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)