இயக்குனர் ஷங்கர் மீது, எந்திரன் திரைப்படக் கதை தொடர்பான வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக செய்தி ஒன்று வெளியானது. சமூக வலைத்தளங்களிலும் இச்செய்தி பரவியது.

Fact Check/Verification:
இயக்குனர் ஷங்கர், பிரமாண்டமான படங்களுக்கு தமிழ் சினிமாவில் பெயர் பெற்றவர்.
அவரது இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அசத்தலான அனிமேஷன் காட்சிகளால் குழந்தைகளையும் கவரும் வகையில் இத்திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருந்தன.
கடந்த 2010 ஆண்டு வெளிவந்த எந்திரன் திரைப்படத்தின் முதல் பாகக் கதை, தன்னுடைய ஜூகிபா கதையை திருடி எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்தநிலையில், இவ்வழக்கில் இயக்குனர் ஷங்கர் மீது எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
Archived Link: https://archive.vn/mIMaW
Archived Link: https://archive.vn/aWLYX
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
குறிப்பிட்ட அச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய சமூக வலைத்தளங்களில் தேடியபோது, இயக்குனர் ஷங்கர் வெளியிட்டிருந்த அறிக்கையை, தமிழ் சினிமா மக்கள் தொடர்பாளரான ரியாஸ் கே அகமது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது நமக்குக் கிடைத்தது.
மேலும், நியூஸ் மினிட், விகடன் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களும் இதுகுறித்த இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தை செய்தியாக வெளியிட்டுள்ளன.
இயக்குனர் ஷங்கர் தனது அறிக்கையில், அவரது வழக்கறிஞர் திரு சாய் குமரன் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தை அணுகி தனக்கெதிராக எவ்வித பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்டு வந்துவிட்டதாகவும், சரிபார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலாவுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Conclusion:
இயக்குனர் ஷங்கர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பரவிய செய்தி தவறானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தெளிவாக விளக்கியுள்ளோம்.
எனவே, நியூஸ்செக்கர் தமிழ் வாசகர்கள் யாரும் இதுபோன்ற செய்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Result: Misleading/False
Our Sources:
PRO Riaz: https://twitter.com/RIAZtheboss/status/1356262418494590978/photo/1
Vikatan: https://www.vikatan.com/tamil-cinema/director-shankar-says-arrest-warrant-news-is-a-fake-news
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)