ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதுபாய் புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் உருவம் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

துபாய் புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் உருவம் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: புர்ஜ் கலீஃபா, துபாய் …#ஜெய்ஶ்ரீராம்
Fact: வைரலாகும் ராமர் இடம்பெற்ற புர்ஜ் கலீஃபா புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

துபாய் புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் உருவம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவுகிறது.

“புர்ஜ் கலீஃபா, துபாய் …#ஜெய்ஶ்ரீராம்” என்று இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

துபாய்
Screenshot from facebook/endesam

Facebook Link

Screenshot from Facebook/nagaiheritage

Facebook Link

Screenshot from x @SURULIVEL1971

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழ்நாட்டில் அசைவம் படைக்கப்படும் குலதெய்வ கோயில்களை திறக்க இன்று தடை என்றாரா நிர்மலா சீதாராமன்?

Fact Check/Verification

துபாய் புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் உருவம் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படம் கடந்த ஆண்டே ராம நவமியன்று புர்ஜ் கலீஃபாவில் ராமர் புகைப்படம் என்று பரவிய நிலையில் புர்ஜ் கலீஃபாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் அவ்வாறு எந்த புகைப்படமும் இடம்பெற்றிருக்கவில்லை.

Instagram will load in the frontend.

மேலும், வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த பிப்ரவரி 3, 2016 அன்று ஐ-ஸ்டாக்கில் இடம்பெற்ற புகைப்படம் ஒன்றினை எடுத்து அதில் ராமர் புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது நமக்குத் தெளிவாகியது. கடந்த ஆண்டு ராம நவமி அன்று புர்ஜ் கலீஃபாவில் ராமர் புகைப்படம் என்று இந்த படம் வைரலாகியபோது இதன் ஃபேக்ட் செக்கினை நாம் வெளியிட்டுள்ளோம்.

குறிப்பிட்ட புர்ஜ் கலீஃபாவின் ஸ்டாக் புகைப்படத்தை எடுத்து எடிட் செய்து ராமநவமி தினத்தில் கடந்த வருடம் பரப்பப்பட்ட புகைப்படமே தற்போது அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு அன்று புர்ஜ் கலீஃபாவில் ராமர் புகைப்படம் என்று பரவி வருவது நமக்கு உறுதியாகியது.

Also Read: ராமர் கோவில் கும்பாபிஷேகம்; இறந்தவர்களை தகனம் செய்ய 5 மாநிலங்களில் தடையா?

Conclusion

துபாய் புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் உருவம் என்று பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Image analysis
iStock photo

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular