Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: நெல் மூட்டைகளைப் பாதுகாக்காமல் கார் ரேஸ் நடத்தும் திமுக அரசு
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் புகைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
மழையில் நெல்மூட்டைகள் நனையும் நிலையில் கார் பந்தயம் தேவையா என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு…. பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு கார் ரேஸ் என….. ஆனால் எங்களுக்கு மட்டும் என்றைக்கு கிடைக்குமோ பாதுகாப்பு” என்று இப்புகைப்படம் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மழையில் நெல்மூட்டைகள் நனையும் நிலையில் கார் பந்தயம் தேவையா என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த பிப்ரவரி 18, 2019ஆம் ஆண்டு ”திடீர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் – விருத்தாசலத்தில் விவசாயிகள் சோகம்!” என்று விகடன் வெளியிட்டிருந்த செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
”விருத்தாச்சாலம் – கடலூர் ஒழுங்குமுறை நெல் விற்பனைக்கூடத்தில் சம்பா சாகுபடி காரணமாக அதிக நெல்மூட்டைகள் வரத்து இருந்த நிலையில் விருத்தாச்சலத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டதட்ட 20,000 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன” என்று இச்செய்தியில் இடம்பெற்றுள்ளது. தினமணியிலும் இச்செய்தி கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக கட்சி ஆட்சியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read: அமெரிக்க டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் இடம்பெற்ற முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
மழையில் நெல்மூட்டைகள் நனையும் நிலையில் கார் பந்தயம் தேவையா என்று பரவும் புகைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report By Vikatan, Dated February 18, 2019
Report By Dinamani, Dated February 19, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.